இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அது நட்பல்ல ....!!!

அது நட்பல்ல ....!!! உன்னை நானும் .... என்னை நீயும் ... புகழ்ந்து பேசின் ... அது நட்பல்ல ....!!! எம்மைப்போல் ... நட்பு யாரும் இல்லை .... நட்புக்கு நாமே சின்னம் ... வசையான வார்த்தைகள்  உண்மை நட்பல்ல ... நட்பு ஒன்றும் அலங்கார ... வார்த்தையில்லை....!!!  + குறள் 790 + நட்பு + இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று  புனையினும் புல்லென்னும் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் -10

அன்புடன் உதவுவதே நட்பு

அன்புடன் உதவுவதே நட்பு  நட்பென்றால் ... மனவேறுபாடில்லாமல் ... தானாக முன்வந்து .... உதவுவதே ....!!! உனக்கு நானும் ... எனக்கு நீயும் ... என்றும் மாறாத .... அன்புடன் உதவுவதே .... உயிர் நட்பு ....!!! + குறள் 788 + நட்பு + நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி  ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 09

என் உயிர் நண்பனே ....!!!

என் உயிர் நண்பனே ....!!! ஆடை அவிழும் போது ..... கூட்டத்தில் மானம் ... காக்கும் கைபோல் ....!!! நண்பா .... உனக்கொரு துன்பம் ... வந்தால் பார்திருப்பேனோ...? உடன் வந்து காப்பேண்டா ... என் உயிர் நண்பனே ....!!! + குறள் 788 + நட்பு + உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே  இடுக்கண் களைவதாம் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 08

உனக்கு உறுதுணையாக .....!!!

உனக்கு உறுதுணையாக .....!!! தீய  வழியில் செல்லாதே ....!!! நண்பா - நான்  இருக்கிறேன் உனக்கு  உறுதுணையாக .....!!! உனக்கொரு துன்பம் ... வந்தால் பொறுத்திடுவேனோ ....? உன் துன்பத்தில் சரிபாதி ... நானடா - நீ என்  உயிர் நண்பணடா ....!!! + குறள் 787 + நட்பு + அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்  அல்லல் உழப்பதாம் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 07

பூவாய் பூப்பதே நட்பு .....!!!

பூவாய் பூப்பதே நட்பு .....!!! கண்டவுடன் மனம் .... குளிர பேசுவதும் .... கைகுலுக்குவதும் ... நட்பே இல்லை ....!!! முகத்தில் நட்பை ... காட்டாதே உள் அகத்தில் ... நட்போடு பழகு .... மனமும் முகமும் ... பூவாய் பூப்பதே நட்பு .....!!! + குறள் 786 + நட்பு + முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து  அகநக நட்பது நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 06

நட்புக்கு அவசியம் அன்று ....!!!

நட்புக்கு அவசியம் அன்று ....!!! அருகில் இருப்பத்தோ ... முகம் பார்பதோ  நெருங்கி பழகுவதோ ... நட்புக்கு அவசியம் அன்று ....!!! எண்ணத்தால் .... உன்னை நான் நினைப்பதும் ... என்னை நீ நினைப்பதும் ... உண்மை நட்பின் அடையாளமே ...!!! + குறள் 785 + நட்பு + புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்  நட்பாங் கிழமை தரும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 05

உன்னுடன் பழகுவது ....!!!

உன்னுடன் பழகுவது ....!!! அன்பு நண்பா .... படிக்க படிக்க இன்பம் .... தரும் புத்தங்கங்ககள் போல் .... இருக்குதடா உன்னுடன் ... பழகுவது ....!!! நீ  மீண்டும் எப்போது .... வருவாய் மீண்டும் ... எப்போது பேசுவாய் ... ஏங்குதடா மனசு ......!!! + குறள் 783 + நட்பு + நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்  பண்புடை யாளர் தொடர்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 03

நட்பு வளர்பிறை மதி

நட்பு வளர்பிறை மதி அன்புடனும் அறிவுடனும் ... உருவாகும் நட்பே உயிர் நட்பு .... உயிர்நட்பு வளர்பிறை மதிபோல் .... தினமும் வளரும் ....!!! சுயநலத்துக்காகவும் .... குறு நோக்கத்துக்காகவும் ... இணையும் நட்புக்கள் .... முழுநிலா தேய்வதுபோல்.... தேய்ந்து கொண்டே செல்லும் ....!!! + குறள் 782 + நட்பு + நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்  பின்னீர பேதையார் நட்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 02

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....! சொத்துகளில் ... தலையாய சொத்து .... நாம் தேடிப்பெறும்  உயர் நட்பே ....! இதைக்காட்டிலும் .... வேறு எந்த சொத்தும் ... சொத்தே அல்ல ...!!! அருமையான நட்பு ... அரண்போல் காக்கும் ....! எவரும் நெருங்க முடியாது ... அசைக்கவும் முடியாது .. அசையாத சொத்து நட்பு ...!!! + குறள் 781 + நட்பு + செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்  வினைக்கரிய யாவுள காப்பு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்  + கவிதை எண் - 01

அவளுக்கு நான் எதற்கு ..?

அவளுக்கு நான் எதற்கு ..? என்னவள் ... என்னை நினைத்து ... வருந்தி வருந்தி  ஏதேனும் அவளுக்கு ... நடந்துவிட்டால் ....? அவளுக்கு நான் எதற்கு ..? என் அன்பு எதற்கு ...? உடலோடு கலப்பு எதற்கு ...? அத்தனையும் பூச்சியமாகி .... விடுமே என் மனமே ....!!! + குறள் 1270 + அவர்வயின்விதும்பல் + பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்  உள்ளம் உடைந்துக்கக் கால். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 190

துடிப்பாய் உயிரே ....!!!

துடிப்பாய் உயிரே ....!!! என்னவளே ... நீ படும் துயரம் அறிவேன் .... உன்னைவிட்டு பிரிந்திருக்கும் .. எனக்கு புரிகிறது ....!!! என்னை விட்டு ... பிரிந்திருக்கும் பெண்ணே .... ஒவ்வொரு நொடியும் .. உனக்கு ஒவ்வொரு மணித்துளி ... நாட்கள் ஒவ்வொன்றும் .... வருடமாய் துடிப்பாய் உயிரே ....!!! + குறள் 1269 + அவர்வயின்விதும்பல் + ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்  வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 189

மனசே பொறுத்திரு ....!!!

மனசே பொறுத்திரு ....!!! பொறுத்திருப்போம் ... போரில் வெல்வோம் ... நாட்டை காப்போம் .... பொறுத்திருப்போம் .....!!! நானும்  என் துணைவியும் .... மாலைபொழுதில் ... விருந்துண்போம்  மனசே பொறுத்திரு ....!!! + குறள் 1268 + அவர்வயின்விதும்பல் + வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து  மாலை அயர்கம் விருந்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 188

துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!

துடித்துகொண்டிருக்கிறேன் ...!!! என் கண்ணாலனே .... நீ வந்தால் என்செய்வேன் ..? ஊடல் செய்வோனோ...? கூடல் செய்வேனோ ...? இரண்டும் செய்வேனோ ...? அத்துணை துன்பத்தை ... அனுபவிக்கும் நான் .... உன் வரவுக்காய் .... துடித்துகொண்டிருக்கிறேன் ...!!! + குறள் 1267 + அவர்வயின்விதும்பல் + புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்  கண்அன்ன கேளிர் விரன். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 187

துன்பங்களை துடைப்பான் ...!!!

துன்பங்களை துடைப்பான் ...!!! என்னவன் என்னிடம் ... என்றோ ஒருநாள் வருவான் .... துன்பங்களை துடைப்பான் ...!!! என்னிடம் இருக்கும் ... அனைத்து துன்பங்களையும் ... என்னவன் மீது கொட்டி .... தீர்த்து அனுபவிப்பேன் .... அத்தனை இன்பத்தை .... பெறுவேன் ....!!! + குறள் 1266 + அவர்வயின்விதும்பல் + வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்  பைதல்நோய் எல்லாம் கெட. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 186

கண்களே காத்திருங்கள் ....!!!

கண்களே காத்திருங்கள் ....!!! கண்களே ... உங்கள் பணி என்னவனை ... பார்ப்பதற்காக இருப்பதே .... எத்துணை துன்பம் வந்தாலும் ... விழித்திருங்கள் என்னவன் .... வருவான் .....!!! என் கண்கள் ... என்னவனை கண்டதும் .... மெலிந்த உடலும் தோலும் ... பொழிவுபெரும்.... கண்களே காத்திருங்கள் ....!!! + குறள் 1265 + அவர்வயின்விதும்பல் + காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்  நீங்கும்என் மென்தோள் பசப்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 185