இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 28 )

உயிர்வாங்கும் பொழுது ...!!! மாலை பொழுதே .... நான் காதலருடன் இருந்த ... இன்ப பொழுதில் -நீ  மாலை பொழுதாய் ... இருந்தாய் .....!!! என்னவனை .... பிரிந்திருக்கும் பொழுது ... இது மாலை பொழுதல்ல ... என்னை கொல்லும்.... உயிர்வாங்கும் பொழுது ...!!! குறள் 1221 + மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்  வேலைநீ வாழி பொழுது. + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 141 ---- உன் காதலன் பிரிவுதானோ ...? மயங்கும்  மாலை பொழுதே ..... உன் மயக்கத்துக்கும் ... உன் காதலன் பிரிவுதானோ ...? புரிந்து கொள் பொழுதே .... துணை இல்லாவிட்டால் ... எல்லோர் காதலும் ... துன்பம் தரும் பொழுதே ...!!! மயக்கமும் மங்களும் ... நிறைந்த துன்பமே ....!!! குறள் 1222 + புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்  வன்கண்ண தோநின் துணை. + பொழுதுகண்டிரங்கல்  + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 142 ----- துன்ப பொழுது ...!!! என்னவன் அருகில் .... இருக்கும் போது மெல்ல  மெல்ல பயந்து பயந்து ... என் மேனியில் படர்ந்த ... மாலை பொழுதே ....!!! இப்போ அவர் இல்லாத ... தருணத்தில் -நீ  நீ மாலை பொழுதல்ல ... உய

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 50)

உண்ட உணவு செரிக்கவேண்டும் .....!!! விருப்பமான உணவை .... உண்பதை விட -உண்ட உணவு  செரிக்கவேண்டும் .....!!! இன்பத்தில் இன்பம் .... கூடல் செய்வதல்ல ..... கூடலுக்கு முன் ஊடல் .... செய்வதே ....!!! + குறள் 1326 + ஊடலுவகை + உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 246 @@ யாருக்கு வெற்றி ? யாருக்கு தோல்வி ? யாருக்கு வெற்றி ...? யாருக்கு தோல்வி ...? ஊடலில் தோற்றவரே .... வென்றவர் ஆவார் ....!!! எப்படி தெரியும் ....? கூடி பெறும் இன்பத்தில் ... இறுதியில் ஊடலின் ... வென்றவர் இனம் ... காணப்படுவர் .....!!! + குறள் 1327 + ஊடலுவகை + ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 247 @@ இன்பம் கிடைக்குமோ ....? வியர்வை வரும்வரை ... விரும்பியவருடன் .... கூடிபெற்ற இன்பம் .... இன்னுமொருமுறை .... கிடைக்குமோ .....? இன்னொருமுறை .... ஊடல் செய்தால் .... முன் பெற்ற கலவி .... இன்பம் கிடைக்குமோ ....? + குறள் 1328 + ஊடலுவகை + ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் க

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 49)

எந்தத்தவறும் இல்லை ... என்னவனிடம் ..... எந்தத்தவறும் இல்லை ... நன்கு அறிவேன் .... செல்ல சண்டையே .... போடுகிறேன் ....!!! செல்ல சண்டை தானே ... கூடலையும் ஊடலையும் ..... கடல் போல் பெருக்கும்....!!! + குறள் 1321 + ஊடலுவகை + இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 241 @@ கொடும் குற்றமில்லை ....!!! என்னவனோடு ..... நான் செய்யும் சிறு சண்டை .... ஊடலின் போது ஏற்பட்டாலும் .... அதுவென்றும் கொடும் .... குற்றமில்லை ....!!! காதல் என்றால் ,,,,, கூடலும் சண்டையும் .... கொஞ்சலும் இருக்கத்தானே .... செய்யும் ....!!! + குறள் 1322 + ஊடலுவகை + ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 242 @@ தேவலோகத்தில் கூட கிடைக்குமோ ....? நிலத்தோடு நீர்கலந்தால் .... நீரெது நிலமெது....? இரண்டற கலந்துவிடும் ....!!! என்னவனோடு ..... ஊடல் செய்யும்போது .... கிடைக்கும் இன்பம் .... தேவலோகத்தில் கூட .... கிடைக்குமோ ....? + குறள் 1323 + ஊடலுவகை + புலத்தலின் புத்தேள்நாடு உண்ட

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 48)

உன் நினைவில்லாமல் .... உயிரே .... எப்போதும் உன்னையே .... நினைத்திருப்பேன் ..... உன் நினைவில்லாமல் .... நான் வாழ்வதே இல்லை ....!!! எப்போதும் என்னையே .... நினைப்பேன் என்றால் .... அவ்வப்போது மறக்கிறீர்கள் .... மறந்தால் தானே நினைவுவரும் .... செல்ல சண்டை இட்டுபடி .... ஊடல் செய்தால் என்னவள் ....!!! + குறள் 1316 + புலவி நுணுக்கம்  + உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 236 @@@@@ உம்மை யார் நினைகிறார்கள் ....? தும்மினேன் ..... யாரும்மை நினைகிறார்கள் .... இப்போதானே உம்மை .... வாழ்த்தினேன் - அதற்குள் .... உம்மை யார் நினைகிறார்கள் ....? அப்போ எனை விட்டு .... உம்மை நினைக்கும் உள்ளமும் .... உமக்கு உண்டோ ....? கேட்டபடி அழுதால் -மனம் ... மாறி அழுதமுகத்துடன் .... ஊடல் செய்தாள் ....!!! + குறள் 1317 + புலவி நுணுக்கம்  + வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 237 @@@@@ ஓகோ ..உம்மை நினைப்பதற்கு .... என்னவனுக்கு ...

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 47)

நான் நாடமாட்டேன் .....!!! என்னவனின் .... அழகு மார்பை .... நான் வெறுக்கிறேன் ..... வீதியில் வந்தவர்கள் .... ரசித்த அந்த மார்பை  வெறுக்கிறேன் .....!!! எச்சில்  பட்ட என்னவனின் ..... மார்பை இனிமேல் நான் ... நாடமாட்டேன் .....!!! + குறள் 1311 + புலவி. + பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 231 @@@ யார் நினை க் கிறார்களோ...? என்னவனோடு ..... ஊடல் செய்தேன் ..... தும்மினான் .... நான் நூறு என்று .... வாழ்த்துவேன் .... என்று நினைத்தார் ....!!! நன்றாக நான் .... வாழ்த்துவேன் ... யார் நினைகிறார்களோ...? என்றாலும் மனம் ... தன்னை அறியாமல் ... வாழ்த்தியது ....!!! + குறள் 1312 + புலவி நுணுக்கம்  + ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 232 @@@ மனதில் ஒரு சஞ்சலம் .... பூத்து குலுங்கிய .... மலர்களை பறித்து .... பூமாலை சூடினேன் .... என்னவனுக்கு .....!!! மனதில் ஒரு சஞ்சலம் .... என்னவன் மாலையுடன் .... செல்கையில் எவளோ ....

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 46 )

இல்லாத காதல் வாழ்க்கை .... பெரும் பிணி கொண்ட ஊடலும் ... புதுமை கொண்ட புலவியும் .... இல்லாத காதல் வாழ்க்கை .... இன்பம் தரா காதலே ....!!! ஏக்கமும் புதுமையும் .... இல்லாத காதழ் வாழ்கை .... முற்றி பழுத்த பழம் .... பயனற்று அழுகி விழுவதும் ... இளம் பிச்சு காய் பழுத்தது ... போல் தெரிந்தாலும் வெம்பி ... பழுத்தது போல் ஆகிவிடும் ....!!! + குறள் 1306 + புலவி. + துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 226 @@@@ இன்பத்திலும் அது துன்பம் ....!!! கூடலும் புணர்ச்சியும் .... கூடிச்சென்றால் இன்பம் .... இடையில் நின்றுவிட்டால் .... ஏக்கமே மிஞ்சும் ....!!! ஏக்கத்தோடு .... கூடிகொண்டிருத்தல் .... இன்பமாக இருந்தாலும் .... இன்பத்திலும் அது துன்பம் ....!!! + குறள் 1307 + புலவி. + ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 227 @@@@@ அந்த காதலில் என்ன பயன் ....? காதல் என்றால் துன்பம் .... இருக்கத்தான் செய்யும் .... என்னால் அவளும் ... அவளால் நானும்

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 45 )

ரசிப்போம் வா மனமே .....!!! ஏய் மனமே .... நானும் நீயும் என்னவனுடன் .... கூடுவோம் வா மனமே வா .... என்னவன் படும் வேதனையை .... ரசிப்போம் வா மனமே .....!!! அவசரபடாதே மனமே ..... அவரின் வேதனையை .... ரசிக்கும் வரை கூடல் செய்யாதே  ஊடல் செய்வோம் மனமே ....!!! + குறள் 1301 + புலவி. + புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  + கவிதை எண் - 221 @@@ உணவுக்கு உப்பு அளவோடு ... உப்பில்ல பண்டம் குப்பையில் ...... உப்பு அதிகமானாலும் குப்பையில் ... உணவுக்கு உப்பு அளவோடு .... இருப்பதுபோல் தான் ஊடலும் ....!!! கூடலுக்கு முன் ஊடல் தேவை .... ஊடலின்றிய கூடல் இன்பமில்லை ... அளவுக்கு அதிகமான கூடல் .... ஊடலில் சலிப்பை தரும் ....!!! + குறள் 1302 + புலவி. + உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 222 @@@@@ துன்பப்படுத்துவதற்கு சமன் என்னவள் ஊடல் செய்கிறாள் ...... ஊடல் அதிகமாகின் கூடல் .... செய்யணும் என் மனமே ....!!! ஊடல் செய்த என்னவளை ... கூடல் செய்யாமல் விடுவது .... து