இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(70-75)

"மனவேறுபாடு " ---------------------- மனிதனோடு ...... மட்டுமல்ல பகை ...... உயிரினங்கள் ..... எல்லாவற்றோடும் பகை .....!!! எல்லாவற்றோடும் .... ஒப்பிட்டு ,வேறுபடுத்தி .... தன்னை தானே குறைத்து .... மதிப்பிட்டு வாழ்வதே ..... "மனவேறுபாடு " என்பர் ....!!! + குறள் 851 + இகல் + இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்  பண்பின்மை பாரிக்கும் நோய். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 71 ------------ நண்பா ..... நீ எனக்கு எத்தனை ..... வலிகளை துன்பங்களை .... தந்தாலும் - நீ எந்தன் .... நண்பனே ......!!! இன்பத்தை தருபவன் ..... மட்டுமே நண்பன் இல்லை ..... துன்பத்தையும் தருவான் ..... சகித்து கொண்டு அவன் .... நட்பையும் தொடர்வதே .... நட்பின் சிறந்த குணம் ....!!!  + குறள் 852 + இகல் + பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி  இன்னாசெய் யாமை தலை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 72 ------------ நீக்கு நீக்கு .... மனவேறுபாடு ...... நீக்கு ......... நீக்கவேண்டியதில் ..... இதுவே முதன்மை ....!!! நீக்கிய மனவேறுபாடை ...... நீக்கிய கணமே ........ கொட்டி கிடைக்கும்

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(65-70)

செய்த .... குற்றத்தை ஒப்பு கொள்.... செய்த குற்றத்தை மேலும் .... செய்யாதே - அது மடமை ....!!! குற்றத்தை மறைக்க ... இன்னுமொரு குற்றத்தை ... செய்துகொண்டே இருப்பது .... உடலை அழகு படுத்த ... உடையை மாற்றும் மாயையாகும் ....!!! + குறள் 846 + புல்லறிவாண்மை + அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்  குற்றம் மறையா வழி. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 66 ------------- நல்லதையே செய் ... நல்லத்தையே கேள்.... நல்லதையே பார் ... என்ற தத்துவத்தை ..... கடைபிடிக்காதவர் .... அறிவிலிகள் இவர்களே ....!!! அறிவில்லாதவன் .... இதை செய்யாதவன் .... யானை தன் தலையில் ... மண் அள்ளி போட்டதுபோல் ....!!! + குறள் 847 + புல்லறிவாண்மை + அருமறை சோரும் அறிவிலான் செய்யும்  பெருமிறை தானே தனக்கு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 67 ------------- தானாக திருந்து நண்பா ----------- ஒன்றில்  தானாக திருந்து நண்பா .... நான் சொல்வதை கேட்டு .... திருந்து நண்பா .....!!! சொந்த புத்தியும் இல்லை .... சொல் புத்தியும் இல்லை .... இவர்களே உலகில் -எந்த  மருந்தாலும் மாற்ற முடியாத .... பெரும் நோயாளிகள் ....!!!

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(60-65)

பெரும் பஞ்சம்  செல்வம் இல்லை .... சொத்துகள் இல்லை .... திரவியங்கள் இல்லை ... இவை கவலையில்லை .....!!! சேர்க்க வேண்டிய செல்வம் .... அறிவே அறிவை திரட்டாத .... மனிதனையே பெரியோர் .... பெரும் பஞ்சம் என்பர் ,,,,!!! + குறள் 841 + புல்லறிவாண்மை + அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை  இன்மையா வையா துலகு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 61 ---- அறிவற்றவன் .... அறிவில் தான் அற்றவன் .... கொடுப்பதில் அறிவற்றவன் .... நிகரற்ற கொடையாளி .... கொடுக்கும் போது அவன் ... அறிவற்றவன் அல்ல ...!!! அறிவற்றவன் .... கொடுக்கும் பொருள் ..... அறிவானவனை கவர்கிறது .... அவன் பெற்ற பாக்கியமே ...!!! + குறள் 842 + புல்லறிவாண்மை + அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்  இல்லை பெறுவான் தவம். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 62 தன்னை வருத்தும்போது  அறிவில்லாதவன் ..... யார் அறிவில்லாதவன் ...? வெறுமனையே புத்தக .... அறிவை பெறாதவன் அல்ல ...!!! தன்னை வருத்தும்போது ... எதிரி கூட வெறுக்கும் படி .... தன்னை வருத்துகிறானே.... அவன்தான் அறிவற்றவன் ...!!! + குறள் 843 + புல்லறிவாண்மை + அறிவிலார் தாந

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(56-60)

என் வழி தனிவழி  என் வழி தனிவழி .... வார்த்தையால் பேசி பேசி .... வாழ்கையை இழப்பவர்கள் .... தன் வழி எதுவென அறியாதவர் ....!!! தன் வழியை அறியாதவனும் .... தன்னால் செய்ய முடியாதவற்றை .... வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் .... தானும் கேட்டு தன் செயலையும்..... கெடுப்பான் ....!!! + குறள் 836 + பேதைமை + பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்  பேதை வினைமேற் கொளின். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 56 -------------------- சொத்தை சேர்க்காதே அறிவுடன் செல்லவத்தை..... சேர்ப்பதே சிறந்த அறிவு .... அறிவில்லாமல் பேதையுடன் .... சொத்தை சேர்க்காதே .... நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!! அறிவில்லாமல் சொத்தை .... நீ சேர்ப்பாய்யாயின்.... கைக்கு எட்டியது வாய்க்கு .... எட்டாததுபோல் ..... உன் உறவுகள் பசியுடன் ... வாடி வதங்குவர் -உன் ... செல்வம் வேடிக்கை .... பார்த்து சிரிக்கும் ....!!! + குறள் 837 + பேதைமை + ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை  பெருஞ்செல்வம் உற்றக் கடை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 57 ----------------- ஒன்றுமே அறியாதவன் ...!!! பேதை என்பவன் ...? எது நல்லது எது கெட