திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 36-40)

உயிருக்கு உயிராய் பழகினாலும் ...

அறிவற்றவனின் நட்பு .....உயிருக்கு உயிராய் பழகினாலும் ...உயிரைதருவேன் என கூறினாலும் ....தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!!
அறிவற்றவனின் நட்பை காட்டிலும் .....அறிவுள்ளவனின் பகை .....பலமடங்கு உத்தமம் .......!!!+குறள் 816+தீ நட்பு,+பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.+திருக்குறளும் கவிதையும் - நட்பியல் +கவிதை எண் -36
சிரித்து சிரித்து பழகும் ....
கெட்ட நட்பை காட்டிலும் ....
வெறுத்து வெறுத்து பேசும் ....
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
கெட்ட நட்பால் ....
சில நன்மைகள் கிடைப்பதை ....
காட்டிலும் - பகை நட்பால் ....
ஆயிரம் தீமைகள் வருவது ....
எவ்வளவோ மேல் .....!!!
+
குறள் 817
+
தீ நட்பு,
+
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் 
பத்தடுத்த கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -37
நடிப்போடு பழகும் நட்பைவிடு 
செய்ய கூடிய உதவியை ....
செய்ய முடியாததுபோல் ....
பாசாங்கு காட்டும் நட்பை ....
தொடராதே....!!!
நடிப்போடு பழகும் நட்பை ....
மெல்ல மெல்ல விலக்குவதே ....
அறிவுடைய ஒருவனின் ......
அற்புதமான செயலாகும் ....!!!
+
குறள் 818
+
தீ நட்பு,
+
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை 
சொல்லாடார் சோர விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -38
------------
கனவிலும் துன்பம் தரும் ....!!!
சொல்வதொன்று ....
செய்வதொன்று ....
உள்ளொன்று ....
புறமொன்று .....
கொண்ட நப்பு ......!!!
இரு தலை பண்பை .....
கொண்ட நட்புகள் ....
நிஜத்தில் மட்டுமல்ல ....
கனவிலும் துன்பம் தரும் ....!!!
+
குறள் 819
+
தீ நட்பு,
+
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு 
சொல்வேறு பட்டார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -39
------------
உன்னை இழிவுபடுத்தும் நட்பு 
உன்னோடு தனிமையில் ....
உயிராய் பழகுவதுபோல் .....
உயிரை கொடுத்து பழகிய ....
நப்பு ......!!!
கூட்டத்தின் நடுவே ....
உன்னை இழிவுபடுத்தும் ....
சொல்லையும் செயலையும் ....
செய்யுமாயின் -வேண்டாம் ...
அந்த நட்பு .....!!! 
+
குறள் 820
+
தீ நட்பு,
+
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ 
மன்றில் பழிப்பார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 40


-----------

கருத்துகள்