கட்டழகனாக இருந்தேன்

கட்டழகனாக இருந்தேன் 

கட்டழகனாக இருந்தேன் 
ஆணழகனாகவும் இருந்தேன் 
ஆண்மை மாறாத பண்புடனும் 
இருந்தேன் ...!!!

அத்தனையும் போனது 
காற்றில் அடிபட்டுப்போன 
கப்பல் போல் ...
என்னவளின் மீது இருந்த 
இன்ப மோகத்தால் ...!!!


திருக்குறள் : 1134
+
நாணுத்துறவுரைத்தல் 
+
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 54

கருத்துகள்