காதலில் வலி இருக்கும் ...

காதலில்  வலி இருக்கும் ...

காதல் 
வலி பொதுவானது ....
காதலில்  வலி இருக்கும் ...
அது எனக்கு மட்டும் ..
இருப்பது வேதனை ....!!!

தராசு 
இருபக்கம் நின்றாலே...
நீதி -அதுபோல் ...
காவடியின் இருபக்கம் ...
சுமை ஒரே அளவாக ...
இருக்கும் -காதலின் 
வலியும் இருவருக்கும் ...
சமனாக இருக்கவேணும் 
உயிரே .....!!! 

திருக்குறள் : 1196
+
தனிப்படர்மிகுதி
+
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல 
இருதலை யானும் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 116

கருத்துகள்