இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

என்னவனே ....
உன்னோடு சேர்ந்திருந்த ...
நிமிடங்களை நினைத்தே ..
இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

உன் நினைவுகள் ....
இல்லாமல் எப்படி வாழ்வேன் ...
அப்படிஎன்றால் நான் ..
இறந்த சடலமாக அல்லவோ ..
இருந்திருப்பேன் ....!!!

குறள் 1206
+
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் 
உற்றநாள் உள்ள உளேன்.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 126

கருத்துகள்