மறந்தால் வாழ்வது எப்படி?.

மறந்தால் வாழ்வது எப்படி?.

என்னவனே ...
அந்த நாட்களை உன் அருகில் 
இருந்த நாட்களை - மறதி 
இல்லாமல் நினைக்கும் போதே 
நெஞ்சு சுடுகிறது .....!!!

உன் நினைவுகளை ...
மறந்தால் எப்படி இருக்கும் ..?
வாழ்வதற்கே நினைவுகள் ...
வாழமுடியுமோ ஒருவரால் ...?
அப்படி இருக்க மறந்தால் 
வாழ்வது எப்படி?.

குறள் 1207
+
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் 
உள்ளினும் உள்ளம் சுடும்.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 127

கருத்துகள்