நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

நிலவே ....
எனக்கு ஒரு உதவி செய் ...
என்று உன் உதவியுடன் ...
அவர் அருகில் இருந்தேன் ...
இணையில்லா இன்பத்தை ...
பெற்றேன் ....!!!

இன்று அவரை ...
தேடுகிறேன் - காணும் ..
நிமிடம் வரை -நிலவே ...
நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

குறள் 1210
+
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் 
படாஅதி வாழி மதி.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 130

கருத்துகள்