என்னவன் பிரியபோகிறார் ....!!!

என்னவன் பிரியபோகிறார் ....!!!

என்னவன் ...
என்னோடு இன்பமாய் ....
இருந்தாலும் -உடல் 
இணைந்ததே தவிர ....
உள்ளத்தால் பிரிந்தே ...
இருந்தான் தோழி ....!!!

என் கையில் இருந்த ....
வளையல்கள் கழன்று ...
விழுந்தபோதே அறிந்தேன் ...
என்னவன் பிரியபோகிறார் ....
என்னை காட்டிலும் என் 
வளையல்கள் புத்திசாலிகள் ....!!!
+
குறள் 1277
+
குறிப்பறிவுறுத்தல் 
+
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம் உணர்ந்த வளை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 197

கருத்துகள்