நான் ஏற்கிறேன் நண்பா ...!!!

நான் ஏற்கிறேன் நண்பா ...!!!

என் 
அருமை நண்பா ....
நீ எனக்காக உரிமையோடு ...
செய்த காரியம் எனக்கு ...
பிடித்ததோ இல்லையோ ...
நான் ஏற்கிறேன் நண்பா ...!!!

எனக்காக ....
என் உரிமைக்காக நீ ...
செய்த காரியத்தை நான் ...
ஏற்காவிட்டால் நம் நட்பில் ...
என்ன பயன் உண்டு ....?
+
குறள் 803
+
பழைமை
+
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை 
செய்தாங்கு அமையாக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -23

கருத்துகள்