நடிப்பு நட்பு வேண்டாம் ...

நடிப்பு நட்பு வேண்டாம் ...

உயிராய் உருகுவதுபோல் 
உனக்கே வாழ்வதுபோல் 
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!

உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும் 
உதட்டில் தோன்றும் 
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ 
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -31

கருத்துகள்