மனமே உனக்கு தெரிகிறது ...!!!

மனமே உனக்கு தெரிகிறது ...!!!

ஓ மனமே ....
உனக்கு தெரிகிறது ...
என்னவன் நம்மை ....
நினைக்காதபோதும் ...
எம்மில் பகையில்லை ...!!!

மனசே .....
நாம் என்னவனிடம் ....
சென்றால் அவன் ....
மன்னிப்பான் என்று ....
தெரிந்ததாலோ எனக்கு ...
முன் நினைக்கிறாயோ....?

+
குறள் 1292
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் 
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 212

கருத்துகள்