நல்லவர்போல் நடித்தாலும் ....

நல்லவர்போல் நடித்தாலும் ....

காக்கை 
அன்னநடை நடந்தாலும் ....
காக்கை காக்கைதான் ...
அதுபோல் கெட்டவர்கள்....
நல்லவர்போல் நடித்தாலும் ....
கெட்டவரே......!!!

அறிந்தேன் ....
நீ பேசிய வார்த்தையில் ....
எவ்வளவோ நல்லவன் போல் .....
நடித்தாலும் உன் முகமூடி ....
கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!!

+
குறள் 826
+
கூடாநட்பு
+
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 46

கருத்துகள்