வேஷங்கள் அழிந்துவிடும் .....!!!

வேஷங்கள் அடுத்தநொடி அழிந்துவிடும் .....!!!

வேஷம் 
போட்டு ராஜாவானாலும் ...
ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் ....
வேஷங்கள் அடுத்தநொடி .......
அழிந்துவிடும் .....!!!

வில் 
வளைவது அம்பை ....
எய்வதற்கே -அழகாயினும்...
வில் ஆபத்தானதே .....
கெட்டவர்கள் நல்லவார்த்தை ....
பேசினாலும் கேட்டவரே ....!!!

+
குறள் 827
+
கூடாநட்பு
+
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 
தீங்கு குறித்தமை யான்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 47

கருத்துகள்