திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01

1. பெண்ணே நீ யார் ....?
 



என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!
நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?
தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?
எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?
கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

2. என்னை தாக்கிவிட்டாய்....!!!
 



நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!
உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!


அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!


குறள் - 1082
தகையணங்குறுத்தல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

3. உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
 



உயிரை
எடுக்க யமன் வருவான்
பாசகயிராய் எறிவான்
என்றெல்லாம் கேள்வி
பட்டிருக்கிறேன் ....!!!


மங்கை உன் கண்னை
பார்த்தபின் தான்
உணர்ந்தேன் என்னை
கொல்ல யமன்
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!




குறள் - 1083
தகையணங்குறுத்தல்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


4. கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!




என்னவே என் உயிரே
பெண்மையில் தலைவியே ..
பிரபஞ்ச்சத்தில் பேரழகியே ...!!!

உன் பார்வை பட்டால் ...
உயிரையே ஒருகணம்
உலுப்புகிறது .....
உன் இரக்க குணத்துக்கும்
அறிவுக்கும் அப்பால்
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!




குறள் - 1084
தகையணங்குறுத்தல்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

5. நீ என்ன எனக்கு யமனா ..?





என்னவளே
நீ பார்த்த நொடியே
பாசக்கயிறு எறிந்து விட்டான்
நீ என்ன எனக்கு யமனா ..?


அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது
உன் கண்ணா ...?

ராமனை மயக்க வந்த
மாயமான் போல் -நீ
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?


குறள் - 1085
தகையணங்குறுத்தல்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

கருத்துகள்