திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 02

06 ) வில்லால்இதயத்தை குற்றுகிறாள்..............!!!
கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன்
வில் போன்ற புருவம் தானடி
என்னை மிரட்டுகிறது ....!!!


விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக
படைத்த இறைவன் தானடி
எனக்கு வில்லன் ....!!!
இறைவா அவள் புருவத்தை
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை
குற்றுகிறாள்..............!!!



குறள் - 1086
தகையணங்குறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍07 ) மெல்ல கொல்லுதடி என்னை ...!!!
அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன்
சற்றே எனக்கும் நாணம் வர
தலைகுனிந்தேன் .....!!!

அதிர்ந்தேன்
உன் திரண்ட மார்பழகில்
நிமிர்த்த நேரழகில் மருண்டேன்
இரு குன்றுகளையும்
மறைக்கும் மெல்லிய ஆடை
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!


குறள் - 1087
தகையணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
 08 ) ஏங்க வைத்து விட்டதடி ....!!!
என்னை கண்டு அஞ்சாத
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத
மங்கையும் இல்லை .....!!!

அத்தனையும் ஒரு நொடியில்
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய்
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம்
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம்
ஏங்க வைத்து விட்டதடி ....!!!


குறள் - 1088
தகையணங்குறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
 09) உன் அழகை கெடுக்கிறாய் ................!!!
என்னவளே
ஏனடி என்னை கண்டவுடன்
புலியை பார்த்த பெண் மானை
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை
பேரழகா ....?


அகத்தே நாணம் என்ற 
பொன் அழகையும்
கொண்டவளே .எதுக்கடி
பொன் நகை அணிகலன்
அணிந்து உன் அழகை
கெடுக்கிறாய் ................!!!


குறள் - 1089
தகையணங்குறுத்தல்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
 10 ) எப்படி புரிய வைப்பேன் ..?
போதையை உண்டவனுக்கும்
பேதையிடன் மாண்டவனுக்கும்
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!
பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு
காதல் உணர்வு இல்லாதவனுக்கு
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும்
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!


குறள் - 1090
தகையணங்குறுத்தல்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

கருத்துகள்