திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 05)
21) இன்பத்தை அள்ளி தரவல்ல...?
மின்னனை ....
தோற்கப்பண்ணும் ....
ஒளிகொண்ட வளையல்...
என்னவள் கரங்களில் தான் ..
காணமுடியும் .....!!!
என் ஐம் பொறிகளை
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!
திருக்குறள் : 1101
புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
ஒண்தொடி கண்ணே உள.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21
@}-
22) என்னவளே நீ மட்டும் ..?
நோய்கள் ஆயிரம் ஆயிரம்
நோய்க்கான மருந்துகளும்
ஆயிரம் ஆயிரம் ....!!!
நோய்க்கான மருந்துகளும்
ஆயிரம் ஆயிரம் ....!!!
பொருத்தமான நோய்க்கு
பொருத்தமான மருந்து
அபூர்வமோ அபூர்வம் ...!!!
பொருத்தமான மருந்து
அபூர்வமோ அபூர்வம் ...!!!
என்னவளே நீ மட்டும்
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும்
இருக்கிறாயடி .....!!!
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும்
இருக்கிறாயடி .....!!!
திருக்குறள் : 1102
புணர்ச்சிமகிழ்தல்
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
தன்நோய்க்குத் தானே மருந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22
@}-
23) ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
பள்ளியறை துணைவியின்
மெல்லிய தோளை தழுவி
உறங்கும் சுகத்துக்கு
ஈடாகாது ஈரேழு உலகம் ....!!!
என்னவளின்
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!
மெல்லிய தோளில் தழுவிய
பள்ளியறை உறக்கம்
இன்ப கண்ணன் உருவாக்கிய
இன்ப உலகத்தை காட்டிலும்
இன்பமான உலகம் ...!!!
திருக்குறள் : 1103
புணர்ச்சிமகிழ்தல்
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
தாமரைக் கண்ணான் உலகு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 23
@}-
24) எங்கே கற்று கொண்டாளோ..?
உன்னை விட்டு விலகினால்
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால்
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால்
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!
இயற்கைக்கு மாறான
தீயை எனக்குள் கொண்டுவரும்
இந்த மாய வித்தையை
எங்கே கற்று கொண்டாளோ..?
தீயை எனக்குள் கொண்டுவரும்
இந்த மாய வித்தையை
எங்கே கற்று கொண்டாளோ..?
திருக்குறள் : 1104
புணர்ச்சிமகிழ்தல்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24
@}-
25) எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!
சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!
இன்பம் கிடைக்கும்...
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்...
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!
என்னவளே -நீ
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!
தலை நிறைய பூசூடி
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது
கூடினாலும் இன்பம்தான் ...!!!
திருக்குறள் : 1105
புணர்ச்சிமகிழ்தல்
வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.
தோட் டார் கதுப்பினாள் தோள்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25
கருத்துகள்
கருத்துரையிடுக