திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 06)

26) என் உயிரே துளிர்விட்டு வளருதடி ....!!!

என்னவளே உன்னை தழுவும் ...
போதெல்லாம் வாடிக்கிடக்கும் ....
செடி மீண்டும் துளிர்ப்பதுபோல் ....
என் உயிரே துளிர்விட்டு ....
வளருதடி ....!!!


தேவதையே உன் தோள்
என்னை வாழவைக்கும்
ஜிவனடி....நீயோ
சாகாவரம் பெற்ற சிரஞ்ச்சீவியடி ...!!!

திருக்குறள் : 1106
புணர்ச்சிமகிழ்தல்
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 26
@}-
27) அந்த சுகத்தை தந்தாய் 

என்னவளே
அழகிய சிற்பமே ...
உன்னிடம் இருந்து தானடி
மாநிறம் என்ற சொல்லே
தோன்றியதோ ....?


தானே உழைத்து
தானே கட்டிய வீட்டில்
குடியிருப்பது ஒரு சுகம்
அந்த சுகத்தை தந்தாய்
உயிரே நீ என்னை தழுவும்
இன்பமடி ....!!!



திருக்குறள் : 1107
புணர்ச்சிமகிழ்தல்
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 27
@}-
28) இன்பசுகம் இதுதானே உயிரே ....!!!

என்னவள் எங்கே....?
நான் எங்கே...?
என்று தேடும் அளவுக்கு
நெருக்கமாகிவிட்டோம் ...!!!

நம்
இருவருக்கும் நடுவில் ...
தூசி கூட நுழைய முடியாது ...
காற்றே புகமுடியாத ..
நெருக்கமடி நமக்குள் ...
காதலின் இன்பசுகம்
இதுதானே உயிரே ....!!!




திருக்குறள் : 1108
புணர்ச்சிமகிழ்தல்
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 28
@}-
29) அவளிடம் சிறுகோபம்

அவள் என்னை சீண்ட
நான் அவளைசீண்ட
அவளிடம் சிறுகோபம்
தோன்ற அவளிடம்
கொஞ்சுவதற்கு கெஞ்ச ....!!!


சின்ன சின்ன ஊடல்
நம் கூடலுக்கு நடக்கும்
ஒத்திகை நாடகமாடி
இதுதானே அன்பே உன்னை
கரம் பிடித்ததன் இன்பமடி ...!!!


திருக்குறள் : 1109
புணர்ச்சிமகிழ்தல்
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 29
  @}- 

30) முகத்தில் புன்னகையுடன் ...!!!

படித்தேன் பல புத்தகம்
அறிந்தேன் பொது விடயம்
கசக்கி புளிந்தேன் மூளையை
தெரிந்தது என் இறந்த கால
அறியாமை ....!!!


கைபிடிதவளே ...
உடல் முழுதும் நகையுடன்
முகத்தில் புன்னகையுடன்
இருக்கும் என்னவளே
உன்னை தழுவ தழுவ
கிணற்று நீர் ஊற்று எடுப்பது
போல் பொங்குதடி இன்ப ஊற்று ...!!!




திருக்குறள் : 1110
புணர்ச்சிமகிழ்தல்
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30

கருத்துகள்