திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 07)
31) அழகுக்கும் மென்மைக்கும் -நீ
ஏய் பூக்களின் ராணியே
மென்மையில் சிகரமாம் நீ
அழகின் வானமாம் நீ
பூக்களில் கர்வம் கொண்டவளே
அனிச்சம் பூவே! - நீ
எதுவாகவும் இருந்திட்டுப்போ ...!!!
மென்மையில் சிகரமாம் நீ
அழகின் வானமாம் நீ
பூக்களில் கர்வம் கொண்டவளே
அனிச்சம் பூவே! - நீ
எதுவாகவும் இருந்திட்டுப்போ ...!!!
என்னவளின்
அழகுக்கும் மென்மைக்கும் -நீ
ஏணிவைத்தாலும் எட்டாதவள்
மென்மைக்கு அனிச்சம் இல்லை
என் மனைவிதான் இனி மேல் ...!!!
அழகுக்கும் மென்மைக்கும் -நீ
ஏணிவைத்தாலும் எட்டாதவள்
மென்மைக்கு அனிச்சம் இல்லை
என் மனைவிதான் இனி மேல் ...!!!
திருக்குறள் : 1111
நலம்புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
மென்னீரள் யாம்வீழ் பவள்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 31
<3
32) சீ சீ என்னே உன் அறிவு ....!!!
ஓ மனமே ....
நீ பூக்களின் ராணிகளை ...
பார்த்திருப்பாய் வியந்திருப்பாய் ...!!!
என் கண்கண்ட என்னவளின் ...
கருவிழிகண்கள் -மனமே...
நீ இதுவரை கண்ட மலர்களை ....
போல் இருக்கும் என்று மயங்காதே ...!!!
நீ பூக்களின் ராணிகளை ...
பார்த்திருப்பாய் வியந்திருப்பாய் ...!!!
என் கண்கண்ட என்னவளின் ...
கருவிழிகண்கள் -மனமே...
நீ இதுவரை கண்ட மலர்களை ....
போல் இருக்கும் என்று மயங்காதே ...!!!
மனமே இதுவரை
பிறர் பார்த்த பூக்களைப்போல்
என்னவளின் கண்னை
பார்க்கிறாயே ....!
சீ சீ என்னே உன் அறிவு ....!!!
பிறர் பார்த்த பூக்களைப்போல்
என்னவளின் கண்னை
பார்க்கிறாயே ....!
சீ சீ என்னே உன் அறிவு ....!!!
திருக்குறள் : 1112
நலம்புனைந்துரைத்தல்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
பலர்காணும் பூவொக்கும் என்று.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 32
<3
33) தேவதை என் இதயதேவதை ...!!!
என் இதய தேவதையே ....
கொல்கிறாய் அழகால் ..?
மினுமினுப்பாய் மூங்கில்போல்
இருக்கும் தோள்...!
உடம்போ மேனி இளந்தளிர் ...
ஆழ்கடல் தேடி எடுத்த முத்து
உன் பற்றொடர் ....!
கொல்கிறாய் அழகால் ..?
மினுமினுப்பாய் மூங்கில்போல்
இருக்கும் தோள்...!
உடம்போ மேனி இளந்தளிர் ...
ஆழ்கடல் தேடி எடுத்த முத்து
உன் பற்றொடர் ....!
நான் இதுவரை முகராத
நறுமணம் உன் மேனிவாசம் ...
என் இதயத்தை கூர் வேல்
கொண்டு குற்றும் உன்
வேல் கொண்ட கண் ....!
அத்தனையும் பெற்ற அழகு
தேவதை என் இதயதேவதை ...!!!
நறுமணம் உன் மேனிவாசம் ...
என் இதயத்தை கூர் வேல்
கொண்டு குற்றும் உன்
வேல் கொண்ட கண் ....!
அத்தனையும் பெற்ற அழகு
தேவதை என் இதயதேவதை ...!!!
திருக்குறள் : 1113
நலம்புனைந்துரைத்தல்
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 33
<3
34) பூக்களே தலை குனியும் அழகியே ....!!!
உயிரே
அழகையும் கண்ணையும் காணும்
பாக்கியத்தை குவளை பூக்கள்
பெற்றிருந்தால் ....!!!
அழகையும் கண்ணையும் காணும்
பாக்கியத்தை குவளை பூக்கள்
பெற்றிருந்தால் ....!!!
உன்
பொன் நகையையும்
புன்னகையும் அழகையும்
காந்த கண்ணையும் கண்டு
உனக்கு நிகராக தாம் இல்லையே
வெட்கப்பட்டு வேதனை பட்டு
தலைகுனியும் -என் அழகியே ...!!!
பொன் நகையையும்
புன்னகையும் அழகையும்
காந்த கண்ணையும் கண்டு
உனக்கு நிகராக தாம் இல்லையே
வெட்கப்பட்டு வேதனை பட்டு
தலைகுனியும் -என் அழகியே ...!!!
திருக்குறள் : 1114
நலம்புனைந்துரைத்தல்
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 34
<3
35) உன் இடை மெல்ல சாகப்போகிறது ....!!!
மெல்லிடையாளே ....
உன் இடையின் மென்மை..
அறியாதவளே ..
மென்மை ராணி பூவாம்
அனிச்சம் பூவை காம்போடு
அணிந்து விட்டாயடி ....!!!
உன் இடையின் மென்மை..
அறியாதவளே ..
மென்மை ராணி பூவாம்
அனிச்சம் பூவை காம்போடு
அணிந்து விட்டாயடி ....!!!
போச்சு போச்சு ...
உன் மெல்லிடை ஒடிந்து
இடையின் ஓசையை இழக்க
போகிறேன் -பூவின் காம்பின்
கனம் தாங்காமல் உன் இடை
மெல்ல சாகப்போகிறது ....!!!
உன் மெல்லிடை ஒடிந்து
இடையின் ஓசையை இழக்க
போகிறேன் -பூவின் காம்பின்
கனம் தாங்காமல் உன் இடை
மெல்ல சாகப்போகிறது ....!!!
திருக்குறள் : 1115
நலம்புனைந்துரைத்தல்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
நல்ல படாஅ பறை.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 35
கருத்துகள்
கருத்துரையிடுக