திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 08)

பூலோக வெண்ணிலா ...!!!

என்னவளே
வெண்ணிலா வானத்தில்
தானே இருக்கும் - நீ
எனக்காக படைக்கப்பட்ட
பூலோக வெண்ணிலா ...!!!



நீ
தரையில் நடமாடுவதை
பார்த்த விண் மீன்கள்
தலை சுற்றி நிற்கின்றன
நிலவு ஏன் நிலத்தில்
நடமாடுகிறது ...?




திருக்குறள் : 1116
நலம்புனைந்துரைத்தல்
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 36

:kiss: 

என்னவளின் அழகில்

ஏய் நட்சத்திரங்களே ...
ஏன் குழப்பம் அடைகிறீர்கள்
என்னவளின் முகத்துக்கும்
முழு நிலாவுக்கும் என்ன
வேறுபாடு கண்டீர்கள் ..?


தேய்ந்து வளரும் மதி
போல் என்னவளின்
அழகும் வளந்து கொண்டே
செல்கிறது நிலவை ஒத்த
என்னவளின் அழகில்
என்ன குழப்பம்
விண் மீன்களே ..?





திருக்குறள் : 1117
நலம்புனைந்துரைத்தல்
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 37

:kiss:

காதலிக்க மனம் தூண்டும் ...!!!

வான் மதியே ...
அழகு தேவதையே ...
என்னவளின் அழகுக்கு
நிகரானவளோ ....?

என் உயிரானவளின்
அழகுக்கு அழகு அவளே
நீ என்னவளின்
அழகுக்கு நிகராய் ஒளி
வீசுவாயானால் உன்னை
காதலிக்க மனம் தூண்டும் ...!!!




திருக்குறள் : 1118
நலம்புனைந்துரைத்தல்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்38

:kiss:

அழகுக்கு சிகரமானவளே....

வெண்ணிலவே
அழகுக்கு சிகரமானவளே....
என்னவளின் கண்கள்
ஆயிரம் ஆயிரம் மலர்
அழகுக்கு நிகரானவை ....!!!


என்னவளின் கண்ணுக்கு
நீ ஆசைப்படாதே
அழகு கண்ணை நீ பெற்றால்
சந்தை பூவாக மாறி விடாதே
நான் ரசிக்கும் பூவாக
இருந்து விடு .....!!!




திருக்குறள் : 1119
நலம்புனைந்துரைத்தல்
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 39

:kiss:

வருந்தம் தருகிறதோ ...?

பூக்களின்
மென்மை ராணியே
அழகுகளின் ராணியே
அனிச்சம் பூவே ....!!!

அன்னப்பறவையே
அழகின் உருவமே
என்னவளின் பாத அழகு
நெருஞ்சிப்பழம் போல்
வருந்தம் தருகிறதோ ...?


திருக்குறள் : 1120
நலம்புனைந்துரைத்தல்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 40

கருத்துகள்