திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 09)

உதட்டோரம் என்னவளின் வார்த்தை ...!!!



உதட்டோரம் என்னவள் ...
மெல்லிய வார்த்தை ...
ஆயிரம் முத்துக்களை ..
கூடவே கொண்ட பேரழகு
வெண்மை பற்கள்....!!!




பற்களும் என்னவளின்
உதடும் உரசி தோன்றிய
உமிழ் நீர் - பஞ்சா
அமிர்த்தத்தில்
பாலும் தேனும் இணைந்த
கூட்டு கலவையடி....!!!






திருக்குறள் : 1121

+

காதற்சிறப்புரைத்தல்

+

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 41


<3


நான் உடல் அவள் உயிர் ....!!!



நானும் என்னவளும்
நகமும் சதையும் போல்
என்று சொல்ல மாட்டேன் ...!!!


நான் கண் என்றால் அவள்
பார்வை .....!!!
நான் மொழி என்றால் அவள்
வார்த்தை ....!!!
நான் உடல் என்றால் அவள்
உயிர் ....!!!






திருக்குறள் : 1122

+

காதற்சிறப்புரைத்தல்

+

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 42



<3


விலகிவிடு கருவிழி கண்மணியே ...!!!



என்
கண்ணில் இருக்கும் ...
கருவிழியே கண்மணியே ....
என்னவளின் இடத்தை ..
பிடித்த என் கண்ணின்
கருவிழியே ....!!!





எனக்கொரு
உதவிசெய் கருவிழியே....!
என்னவளை
கருவிழியாக்கபோகிறேன்
என் கண்ணில் இருந்து
விலகிவிடு கருவிழி
கண்மணியே ...!!!







திருக்குறள் : 1123
+
காதற்சிறப்புரைத்தல்
+
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 43










<3


சடலமானேன் உயிரே ...!!!



என்னவளும் நானும் ...
எம்மை மறந்து இணையும்
தருணத்தில் -என் உடலுக்கு
உயிராவாள் என் உடல் உயிரை
உணரும் ....!!!




என்னவளே நீ என்னை
விலகும் போது என் உடலில்
உயிர் பிரியும் உணர்வடி ...
நீ என்னை பிரியும் போது
சடலமானேன் உயிரே ...!!!





திருக்குறள் : 1124
+
காதற்சிறப்புரைத்தல்
+
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 44









<3


உன்னை நினைப்பதுமில்லை ..!!!



மின்னலின் ஒளி கொண்ட ...
கண் அழகியே ....
வாழ்க்கை துணைவிக்கு
அனைத்தையும் கொண்ட
என்னவளே ....!!!




உன்னை மறப்பதா ...?
உன்னை நினைப்பதா ...?
உன்னை மறைந்தால்..
தானே நினைக்க - உன்னை
நினைத்தால் தானே உயிரே
உன்னை மறப்பதற்கு ...?
உன்னை மறப்பதுமில்லை
உன்னை நினைப்பதுமில்லை ..!!!








திருக்குறள் : 1125
+
காதற்சிறப்புரைத்தல்
+
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 45

கருத்துகள்