திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 10 )

கண்ணுக்குள் இருப்பவனே ...!!!

என்
கண்ணுக்குள் இருப்பவனே
கண்ணாய் இருப்பவனே
என்னை .....
விட்டு எப்படி விலகுவாய் ,,?


நான் ஒரு நொடி
கண் மூடி இமைத்தாலும்
என் கண்ணுள் இருப்பவன்
வருத்தபடமாட்டான் ...
பிற ஆண்களை போல் இல்லை
என்னவன் ..!!!
என்னை புரிந்துகொண்ட நுண்
அறிவு மிக்கவன் என் ஆடவன் ...!!!






திருக்குறள் : 1126
+
காதற்சிறப்புரைத்தல்
+
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர். 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 46







‍ <3

நீ மறைந்து விடுவாயோ ....?

என்
கண்ணுக்குள் இருக்கும்
கண்ணாலனே .....!!!
கண் இமைக்க பயப்பிடுவது
என் மனம் ....!!!


என்
வில் கொண்டகண்ணுக்கு
மை தீட்டவும் தயங்குகிறேன்
மை தீட்டும் தருணத்தில்
என்னவனே நீ மறைந்து
விடுவாயோ என்று மனம்
வருந்துவதால் - மை
தீட்ட மாட்டேன் என்னவனே...!!!






திருக்குறள் : 1127
+
காதற்சிறப்புரைத்தல்
+
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 47







<3

இதயத்தில் குடியிருப்பவனே ...!!!

என் நெஞ்சுக்குள்ளே
குடியிருக்கும் என்னவனே
இதயமே உனக்கு கோயில்
நீயே என் இதய தெய்வம் ...!!!

என் இதய தெய்வமே
இதயத்தில் குடி கொண்டு
வாழ்பவனே - உனக்கு
சுட்டு விட கூடாது என்பதால்
சூடான உண்பதையே
தவிர்த்து விட்டேன்
என்னவனே ....!!!




திருக்குறள் : 1128
+
காதற்சிறப்புரைத்தல்
+
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 48






<3

இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!

கண்ணுக்குள் கரு விழியாய்
இருப்பவன் நீயடா ...!!!
கண் இமைக்க விடாமல்
கலக்கம் செய்பவன் நீ

கண் இமைத்தால் நீ
மறைந்து விடுவாயோ ...
என்ற ஏக்கத்தால் கண்
மூடாது கண் இமைக்காமல் ...
உன்னோடு நானிருக்கிறேன் ...!
நம் காதலை புரியாத...
என் அயலவர் உன்னை
இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!






திருக்குறள் : 1129
+
காதற்சிறப்புரைத்தல்
+
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர். 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 49







<3

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

எனக்குள் அவரும்
அவருக்குள் நானும்
இரு உடலாக இருந்தும்
ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

உடல் தான் வேறு
உயிர் ஒன்றுதானே உயிரே
உயிருக்கு உயிராய் இருக்கும்
எம்மை புரியாத இவர்கள்
பிரிந்து இருக்கும் உடலை
பார்த்து பிரிந்து வாழ்கிறோம்
என்கிறார்களே ....!!!




திருக்குறள் : 1130
+
காதற்சிறப்புரைத்தல்
+
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர். 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 50

கருத்துகள்