திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 16)

நம்புதில்லை இந்த மனம் ....!!!
 கண்ணாளனே....!!!
செல்லபோவது உறுதி
சொல்லப்போவதும் உறுதி
எப்படி உங்கள் மனம்
கல்லானது ...?

இங்கிருந்து துடிக்கபோகும் 
என் உள்ளத்தை ஒருகணம்
சிந்தித்து பார்த்தாயா ...?
சென்றுவருவேன் கண்ணே
கலங்காதே என்றாலும்
நம்புதில்லை இந்த மனம் ....!!!


திருக்குறள் : 1156
+
பிரிவாற்றாமை
+
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 76


மெல்லிடையானதை பார் ,....!!!
 என்னவனே ....!!!
நீ என்னை விட்டு பிரியும் ..
துயரத்தை கொஞ்சம் பாராயோ ..?
துன்பத்தால்
மெல்லிடையானதை பார் ,....!!!


அணிந்திருக்கும் வளையல் 
தானாக கழன்று விழுந்து
என் துயரத்தை ஊரறிய
செய்துவிட போகிறது .......!!!

திருக்குறள் : 1157
+
பிரிவாற்றாமை
+
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 77



நீ இல்லாதஊரில் வாழ்வதா ..? 

உற்றார் இல்லாத ஊரிலும் ....
உறவுகள் இல்லாத இடத்திலும் ...
வாழ்வதை விட துன்பம் ....
ஏதுண்டு என்னவனே .....?

என் இனியவனே ...
அதைவிட கொடுமை ....
நீ இல்லாத இந்த ஊரில்
வாழ்வதா ..? வாழ்வின்
உயிர் பிரியும் கொடுமைக்கு
சமனல்லவா இக் கொடுமை ....!!!


திருக்குறள் : 1158
+
பிரிவாற்றாமை
+
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 78


என்னவனின் பிரிவை விட ...!!!
 தொட்டால் தான் சுடும் -தீ 
அதுகூட பெரியதொரு ...
துன்பத்தை தருவதில்லை ...
என்னவனின் பிரிவை விட ...!!!

காதலிலும் காமத்திலும் ...
அன்புக்குரியவரின் பிரிவு ...
தீயை விட கொடுமையான
வேதனை வடுவையும் ...
தருகிறதே .....!!!

திருக்குறள் : 1159
+
பிரிவாற்றாமை
+
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 79


பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!

ஒப்புதலுக்கு துணைவனின்..
பிரிவை சம்மதிக்கும் ...
பெண்கள் பலர் உள்ளனர் .....
பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!

எனக்கு தெரியவில்லை
என்னவனே உன்னை
பிரிந்த நொடியில் இருந்து
வாழ்வேனோ ...?
நீ மீண்டும் வரும் வரை
இருப்பேனோ .....?



திருக்குறள் : 1160
+
பிரிவாற்றாமை
+
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 80

கருத்துகள்