திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 18)

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

காதல் இன்பம்
ஊற்றுப்போன்றது
அது பெருகி பெருகி
கடலைபோல் மாறி
இன்பம் தரும் ....!!!


என்னவனே ...
பிரிந்து வாழ்வது
கடலை விட கொடுமை ...
கடலின் ஆழத்தை அளந்து
விடலாம் - நீ தந்த துயரத்தை
அளவிடவே முடியாதடா ....!!!



திருக்குறள் : 1166
+
படர்மெலிந்திரங்கல்
+
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86





@@@@@

தத்தளிக்கிறேன் ...!!!

என்னவனே
காதலின் துன்பம்
நடுகடலில் தத்தளிக்கும்
படகை போன்றது ....!!!

நடு ராத்திரியானாலும் ...
உன் நினைவோடு ....
தனித்திருந்து தவிக்கிறேன் ...
காதல் என்ற கடலின் ...
துன்பத்தை கடந்து செல்ல ....
முடியாமல் தத்தளிக்கிறேன் ...!!!




திருக்குறள் : 1167
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 87






@@@@@

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

ஓ இரவே நீயும்
என்னைபோல் அநாதை
எல்லோரையும்
தூங்க வைத்திவிட்டு
நீ -என்னோடு இருகிறாய் ...!!!


காதல்
வலி கொண்டவருக்கு
பகல் என்ன ..?
இரவென்ன ..?
இரவே கவலை படாதே
உன்னோடு நானும்
இருக்கிறேன் ....!!!




திருக்குறள் : 1168
+
படர்மெலிந்திரங்கல்
+
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 88





@@@@@

இரவுகளே நிறுத்துங்கள்

காதல் துன்பத்தில்
பெரும் துன்பம் விடியாத
இரவுகள் தான் .....!!!
நினைவுகளோடு தூங்காத ..
கண்ணுக்கு விடியல் தான்
விடுதலை .......!!!



நீண்டு போகும்
இரவுகளே நிறுத்துங்கள்
முடியவில்லை இதற்கு
மேல் நினைவுகளோடு
ஏங்கிகொண்டிருக்க .....!!!


திருக்குறள் : 1169
+
படர்மெலிந்திரங்கல்
+
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 89





@@@@@

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

என்னவனே ..
நீ இருக்கும் தூரம் வரை
என் எண்ணங்களும்
நீண்டு கொண்டே செல்கிறது ....!!!

எண்ணங்கள் நீண்ட
தூரம் போல் -என்
கண்கள் நீ இருக்கும்
இடத்தை சென்றிருந்தால்
கண்கள் கண்ணீர்
வெள்ளத்தில் நீந்தாதடா ....!!!



திருக்குறள் : 1170
+
படர்மெலிந்திரங்கல்
+
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 90

கருத்துகள்