திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 19)

கண்கள் செய்த குற்றமே ..

என்
கண்கள் செய்த குற்றமே ..
உன் மீது காதல் வந்தது ..
கண்ணே என் கண்ணே
நீ தான் என் உயிரே ....!!!


கண்ணால் தோன்றிய ...
காதல் நோயென்பதால் ...
தானே உன்னை நினைந்து ..
என் கண்கள் அழுகின்றனவோ ...?
தோற்றிவித்ததும் -நீ
துன்பப்படுவதும் - நீ




திருக்குறள் : 1171
+
கண்விதுப்பழிதல்
+
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 91






@@@@@

காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

ஏய் கண்விழியே ...
கண்டவுடன் காதல் கொண்டாய் ...
வரப்போகும் துன்பத்தை ....
அறியாமல் மயங்கினாய் .....
விரும்பினாய் .....!!!


காணவில்லை உயிரை
என்பதால் கலங்கி நிற்கிறாய்
கண் விழியே  -அத்தனைக்கும்
காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

திருக்குறள் : 1172
+
கண்விதுப்பழிதல்
+
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 92





@@@@@

என் கண்களை நினைத்து

அன்று
பார்த்த நொடியில் ..
அவரை பற்றிக்கொண்டேன்..
கண் பார்த்தால் காதல் வரும் ..
என்பதை கண்டுகொண்டேன் ...!!!


இன்று
என்னவனை நினைத்து
என் கண்கள் கலங்குகின்றன ...
என் கண்களை நினைத்து
சிரிக்கிறேன் சிந்திக்கிறேன்
திணறுகிறேன் நான் ...!!!



திருக்குறள் : 1173
+
கண்விதுப்பழிதல்
+
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 93





@@@@@

நீ அனுபவித்துகொள் ..!!!

என் கரு விழிகண்கள் ...
அவனை கண்டவுடம் ..
காதல் கொண்டு தவிக்கிறது ..
காதலில் விழுந்து தப்பவும் ..
முடியாமல் வாழவும்
முடியாமல் தவிக்கிறது .....!!!



பாவம் என் கண்கள்
அழுது அழுது வற்றியே
விட்டது கண்கள் ...
செய்தது நீ அனுபவித்துகொள் ..
கண்ணே.....!!!


திருக்குறள் : 1174
+
கண்விதுப்பழிதல்
+
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 94





@@@@@

அன்று உணரவில்லை...

கடலை விட ஆழமான ....
காதலை ஏற்படுத்திய ..
என் கண்கள் ....
அன்று உணரவில்லை...
இத்தனை வலிவருமென்று ....!!!


கண்ணீரால்
நிரம்பிய கண்கள் தூங்க ..
முடியாமல் தவிக்கிறதே ...
என் கண் படும் வேதனையை ..
சொல்ல வார்த்தையே இல்லை ...!!!


திருக்குறள் : 1175
+
கண்விதுப்பழிதல்
+
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 95

கருத்துகள்