திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 21)

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

என்னவனே ....
நீ என்னை விட்டு பிரிய ..
விடைகொடுத்தது நானே ...
அன்று தெரியவில்லை ..
இதனை துன்பத்தை ....!!!


இப்போ நான் படும் ...
துன்பத்தை -என் உடல் ...
படும் வேதனையை யாரிடம் ...
யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

திருக்குறள் : 1181
+
பசப்புறுபருவரல்
+
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 101







$$$$$$$$$$$$

பிரிவு கொடுமையானதே ...

என்னவனின் பிரிவு ..
கொடுமையானதே ...
அதனால் வந்த பசப்பும் ...
கொடுமையானதே ....!!!


என்னவன் ....
தந்த பிரிவின் வலியை...
என் உடல் முழுதும்
படர்கிறது - நினைத்தால்
சுமைகூட சுகம் தான் ...!!!


திருக்குறள் : 1182
+
பசப்புறுபருவரல்
+
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 102







$$$$$$$$$$$$

காதல் ஒருவகை பரிமாற்றம் ...

என்னவன் ..
காதல் நோயையும் .....
உள்ளதுன்பத்தையும்...
எனக்கு கைமாறாய் தந்து ....!!!

என் அழகையும் ...
காதல் வெட்கத்தையும் ...
கொண்டு சென்று விட்டான் ...
காதல் ஒருவகை பரிமாற்றம் ...
தான் போல் இருக்கிறதே ...!!!


திருக்குறள் : 1183
+
பசப்புறுபருவரல்
+
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 103







$$$$$$$$$$$$

ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!

நான்
நினைப்பதும் அவரை ...
எந்தநேரமும் பேசுவதும் ..
அவரை பற்றியே ....
அவரின் நேர்மையும் ..
திறமையுமே கூறுகிறேன் ...!!!



எப்படி...?
என் உடலில் என்னை
அறியாமல் உண்ணராமல்...
பசலை நிறம் வந்தது ..?
இது ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!


திருக்குறள் : 1184
+
பசப்புறுபருவரல்
+
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 104







$$$$$$$$$$$

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!!

ஒரு
நொடிகூட பிரியவில்லை ...
சிறு தூரம் கூட அவர்...
செல்ல வில்லை .....!!!

எப்படி என் உடலில் ...
காதல் நோய் அதற்குள் ..
தொற்றியது ....?
அவர் பிரிந்து செல்லும் ..
நொடியில் காதல் பசலை
நிறமும் என்னில் படர்கிறதே
என்ன மாயம் இது ...?




திருக்குறள் : 1185
+
பசப்புறுபருவரல்
+
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 105

கருத்துகள்