திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 23)
என்னை விரும்பும் -நீ
என்னவனே ....
என்னை விரும்பும் -நீ
உன்னால் பெற்ற பாக்கியம் ...
என்றே நினைக்கதோன்றும் ....!!!
காதலர்
ஒருவரை ஒருவர் ...
விரும்புவது - விதையில்லா
கனிபோல் அன்பே ....
முழுபயனையும் நாமே ...
சுவைக்கிறோம் ....!!!
திருக்குறள் : 1191
+
தனிப்படர்மிகுதி
+
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 11
என்னவனே ....
என்னை விரும்பும் -நீ
உன்னால் பெற்ற பாக்கியம் ...
என்றே நினைக்கதோன்றும் ....!!!
காதலர்
ஒருவரை ஒருவர் ...
விரும்புவது - விதையில்லா
கனிபோல் அன்பே ....
முழுபயனையும் நாமே ...
சுவைக்கிறோம் ....!!!
திருக்குறள் : 1191
+
தனிப்படர்மிகுதி
+
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 11
&&&&&&&
காதல் பருவமழை ....!!!
என்னவனே ...
உன்னை நானும் ..
என்னை நீயும் -சந்திக்கும்
கணப்பொழுது இன்பத்தின் ...
உச்சமடா ....!!!
காதலர் நாம் ...
ஒருவரை ஒருவர் சந்திக்கும் ...
அந்த கணப்பொழுது ...
காதலர் இதயத்தில் பொழியும் ..
காதல் பருவமழை ....!!!
திருக்குறள் : 1192
+
தனிப்படர்மிகுதி
+
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 112
@@@@@@
என்னவனே ...
உன்னை நானும் ..
என்னை நீயும் -சந்திக்கும்
கணப்பொழுது இன்பத்தின் ...
உச்சமடா ....!!!
காதலர் நாம் ...
ஒருவரை ஒருவர் சந்திக்கும் ...
அந்த கணப்பொழுது ...
காதலர் இதயத்தில் பொழியும் ..
காதல் பருவமழை ....!!!
திருக்குறள் : 1192
+
தனிப்படர்மிகுதி
+
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 112
@@@@@@
உனக்கு நான் எனக்கு நீ
எம் அன்பு ....
உன்னால் நானும் ...
என்னால் நீயும் -காதல்
என்னும் கயிற்றால்
கட்டப்பட்ட உணர்வு ....!!!
காதல்
அன்பால் கட்டப்பட்ட ...
செருக்கில் வாழ்கிறேன் ...
உனக்கு நான் எனக்கு நீ ...
செருக்கு இருக்கும் தானே ...!!!
திருக்குறள் : 1193
+
தனிப்படர்மிகுதி
+
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 113
#######
எம் அன்பு ....
உன்னால் நானும் ...
என்னால் நீயும் -காதல்
என்னும் கயிற்றால்
கட்டப்பட்ட உணர்வு ....!!!
காதல்
அன்பால் கட்டப்பட்ட ...
செருக்கில் வாழ்கிறேன் ...
உனக்கு நான் எனக்கு நீ ...
செருக்கு இருக்கும் தானே ...!!!
திருக்குறள் : 1193
+
தனிப்படர்மிகுதி
+
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 113
#######
நான் பாவம் செய்த பெண்
உயிரானவனே ....
உன்னால் நான் கவரப்பட ..
அருகதை அற்றவள் எனின் ...
உன் உள்ளத்தில் நான் ..
இல்லையென்றே அர்த்தம் ...!!!
உன் உள்ளத்தில் நான் ...
இல்லையென்றால் ....
நான் பாவம் செய்த பெண் ...
உண்மை காதல் இருவரும்
ஒருவரை ஒருவர் நினைப்பது ...
இல்லையேல்.....
நான் பாவியானேன் ...!!!
திருக்குறள் : 1194
+
தனிப்படர்மிகுதி
+
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 114
%%%%%%%
உயிரானவனே ....
உன்னால் நான் கவரப்பட ..
அருகதை அற்றவள் எனின் ...
உன் உள்ளத்தில் நான் ..
இல்லையென்றே அர்த்தம் ...!!!
உன் உள்ளத்தில் நான் ...
இல்லையென்றால் ....
நான் பாவம் செய்த பெண் ...
உண்மை காதல் இருவரும்
ஒருவரை ஒருவர் நினைப்பது ...
இல்லையேல்.....
நான் பாவியானேன் ...!!!
திருக்குறள் : 1194
+
தனிப்படர்மிகுதி
+
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 114
%%%%%%%
கருத்துகள்
கருத்துரையிடுக