திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 24)

காதலில்  வலி இருக்கும் ...
காதல்
வலி பொதுவானது ....
காதலில்  வலி இருக்கும் ...
அது எனக்கு மட்டும் ..
இருப்பது வேதனை ....!!!

தராசு
இருபக்கம் நின்றாலே...
நீதி -அதுபோல் ...
காவடியின் இருபக்கம் ...
சுமை ஒரே அளவாக ...
இருக்கும் -காதலின்
வலியும் இருவருக்கும் ...
சமனாக இருக்கவேணும்
உயிரே .....!!!


திருக்குறள் : 1196
+
தனிப்படர்மிகுதி
+
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 116

@@@@@

நான் மட்டும் துன்பப்படுவதா ,,,?
ஏய் காமனே ....!!!
நீ இருவரிடமும் இரு ...
என்னில் மட்டும் இருக்காதே ...
நான் மட்டும் துன்பப்படுவதா ,,,?

நீ என்னில் தரும் வலி ...
என் மேனியில் படரும் ....
காதல் தேமல் அங்கும் ...
படர செய் - இல்லையேல் ...
என் வலியை என்னவன்
உணரமாட்டான் ....!!!


திருக்குறள் : 1197
+
தனிப்படர்மிகுதி
+
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 117

@@@@@

கல் நெஞ்சக்காரி நான் ...!!!
 என்னவனே ....
இதுவரை என் நினைவு ..
உனக்கு வரவில்லையோ ..?
பிரிந்து சென்று இத்தனை ..
நாட்கள் என் நினைவு ...
வரவில்லையோ ...?


உன் பதில் வராமல் ...
துடிக்கும் என் மனம்போல் ...
உலகில் எந்த கொடிய செயல் ...
இருக்கபோகிறது ...?
உயிரோடு இருக்கும்...
கல் நெஞ்சக்காரி நான் ...!!!


திருக்குறள் : 1198
+
தனிப்படர்மிகுதி
+
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 118

@@@@@@

நீ என்னில் அன்பு காட்டாமல்...?
என்னவனே ....
நீ என்னில் அன்பு காட்டாமல் ...
எத்தனை நாள் இருந்தாலும் ..
இருந்து விட்டு போ ....!!!

உன்னிடம் இருந்து
வரும் ,வரப்போகும் ...
செய்திகள் எனக்கு ..
எப்போதும் இன்பம் ...
செவிகளுக்கு இன்ப..
ஊற்றுதான்உயிரே ,....!!!


திருக்குறள் : 1199
+
தனிப்படர்மிகுதி
+
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 119

@@@@@
 என்னவனின் இதயத்துக்கு ...!!!
 என் நெஞ்சே ...
நீ வாழ்க உன்னை ...
எப்படி போற்றுவேன் ..?
இத்தனை துன்பத்தை ...
அனுபவிக்கும் உன் பண்பை ...
எப்படி போற்றுவேன் ...?

உன்னிடம் அன்பில்லாத ...
சடப்பொருளை கொண்ட ...
என்னவனின் இதயத்துக்கு ...
நீ உன் துன்பத்தை கூறி ...
என்ன பயன் ...?
இதை காட்டிலும் -மனமே ...
நீ கடலைத் தூர்ப்பது எளிது ...!!!
திருக்குறள் : 1120
+
தனிப்படர்மிகுதி
+
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கருத்துகள்