திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (26)

இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!
என்னவனே ....
உன்னோடு சேர்ந்திருந்த ...
நிமிடங்களை நினைத்தே ..
இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

உன் நினைவுகள் ....
இல்லாமல் எப்படி வாழ்வேன் ...
அப்படிஎன்றால் நான் ..
இறந்த சடலமாக அல்லவோ ..
இருந்திருப்பேன் ....!!!


குறள் 1206
+
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 126
 ^^^^^^^^^^^^^^
மறந்தால் வாழ்வது எப்படி?.
என்னவனே ...
அந்த நாட்களை உன் அருகில்
இருந்த நாட்களை - மறதி
இல்லாமல் நினைக்கும் போதே
நெஞ்சு சுடுகிறது .....!!!

உன் நினைவுகளை ...
மறந்தால் எப்படி இருக்கும் ..?
வாழ்வதற்கே நினைவுகள் ...
வாழமுடியுமோ ஒருவரால் ...?
அப்படி இருக்க மறந்தால்
வாழ்வது எப்படி?.


குறள் 1207
+
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 127

நினைவுகளை தந்தமையே ...!!!

நினைவுகளுக்கு மேல் ....
நினைவுகளால் உன்னை ...
நினைக்கிறேன் -நிச்சயம்
என்னவனே என்னை -நீ
வெறுக்க மாட்டாய் ....!!!

என்னவனே ...
நீ செய்த  உதவி -உன்னை ..
உன்னை நினைப்பதற்கான ...
நினைவுகளை தந்தமையே ...!!!

குறள் 1208
+
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 128

^^^^^^^^^^^^^^
நீ வேறு நான் வேறு இல்லை
 உயிராளனே ....
நீ வேறு நான் வேறு இல்லை ...
நாம் இணைந்த உயிர் ..
என்றெல்லாம் வார்த்தை ...
கூறியவனே....!!!

உன் பிரிவு ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுதடா...
நீ சொன்ன வார்த்தைகளை ...
மறந்து விட்டீரோ ....?

குறள் 1209
+
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 129

^^^^^^^^^^^^^
 நீ மறையாமல் இருப்பாயோ ...!!!
 நிலவே ....
எனக்கு ஒரு உதவி செய் ...
என்று உன் உதவியுடன் ...
அவர் அருகில் இருந்தேன் ...
இணையில்லா இன்பத்தை ...
பெற்றேன் ....!!!


இன்று அவரை ...
தேடுகிறேன் - காணும் ..
நிமிடம் வரை -நிலவே ...
நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

குறள் 1210
+
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கருத்துகள்