திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (27)

என்னவன் மனமிரங்கி ....
கண்டது கனவல்ல ...
என்னவன் விட்ட தூது ....
நான் புலம்பிய புலம்பலுக்கு
என்னவன் மனமிரங்கி ....
அனுப்பிய எண்ண தூது....!!!

என்னிடம் வந்த கனவே ...
உன் மூலம் என்னவனுக்கு ...
என்ன  விருந்து  படைப்பேன் ....?
என்ன கைமாற்றை தருவேன் ...!!!

குறள் 1211
+
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

+
 கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்



கவிதை எண் - 131

###### <3
 நினைவுகள் தூங்க வில்லை ...!!!
 என்னவனே ....
என் கண்கள் தான் தூங்கி ...
நாடகமாடுகின்றன ....
நினைவுகள் தூங்க வில்லை ...!!!

என் கரு விழிகள் ...
தூங்குமானால் கனவில் ..
வந்து பார் நான் உயிரோடு ....
இருப்பதை சொல்வேன் ....!!!

குறள் 1212
+
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

+
 கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்



கவிதை எண் - 132

####### <3
 என்றோ இறந்திருப்பேன் ....!!!
 என்னவனே ....
நினைவில் நேரில் வந்து ...
இன்பத்தை தராதவனே ...
இன்னும் நான் உயிருடன் ..
இருக்கிறேன் ....!!!


கனவில் வந்து -நீர்
போவதால் தான் என் ...
உயிர்  இருக்கிறது ....
கனவிலும் வராது போனால் ...
என்றோ இறந்திருப்பேன் ....!!!

குறள் 1213
+
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 133

###### <3
 இன்பத்தோடு இருக்கிறேன் ....
 நீர்  நேரில் வந்து ....
அன்பு காட்டாவிட்டாலும் ...
இன்பத்தோடு இருக்கிறேன் ....
அத்தனைக்கும் நீர் ...
கனவில் வந்து செல்வதே ...
காரணம் ....!!!


நீர்
இருக்கும் இடம் தெரியாது ....
என்ன செய்கிறீர் என்றும் ...
தெரியாது ....
கனவு எல்லாவற்றையும்...
எனக்கு காட்டுகிறது ....!!!


குறள் 1214
+
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 134

###### <3

நீர் கனவில் வரும் இன்பம்
 என்னவனே ...
உம்மை நேரில் கண்ட ...
இன்பம் போல் இருக்கிறது ..
நீர் கனவில் வரும் இன்பம் ....

உண்மையை சொன்னால் ....
எனக்கு ஒரு வேறுபாடும் ...
தெரியவில்லை நீர் ....
கனவில் வரும் வேளை ...!!!

குறள் 1215
+
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 135

###### <3
 நினைவும் ஒரு எதிரி தான் .....!!!
 நினைவும்
ஒரு எதிரி தான் .....
நினைத்து கொண்டே
இருப்பதால் ...
கனவு காண்பது எப்படி ...?


ஏய் நினைவே ...
நீ மட்டும் என்னில் ....
இல்லாமல் ...
இருந்திருந்தால் -கனவில்
என்னவன் என்னோடு ...
இருந்திருப்பாரே ....!!!

குறள் 1216
+
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 136

~~~~~~~~~~~~

வேடிகையாகிவிட்டது ....!!!
 நேரில்
வருவார் வருவார்
என்று ஏக்கத்தை தருவதும் ....
வராமல் என்னை வேதனை ...
படுத்துவதும் அவரின் ....
வேடிகையாகிவிட்டது ....!!!


நேரில் வராமல் ...
கனவில் வந்து என்னை ...
துன்பப்படுத்துவது ....
துயரை பெரிதாக்குவதும் ...
என்ன காரணம் உயிரே ...!!!

குறள் 1217
+
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 137

~~~~~~~~~~~
 கனவில் இத்தனை இன்பமா ...?

தூக்கத்தில் கனவில் ...
வந்து என் தோள் மீது சார்ந்து ...
எனக்கு இன்பம் தந்த்தவனே ...
கனவில் இத்தனை இன்பமா ...?

கனவு கலைந்து...
என்னை விட்டு விலகாமல் ...
என் நெஞ்சில் இருப்பவனே ...
விழித்தாலும் மறைந்தாலும் ...
நீ என் அருகில் தானே ....!!!

குறள் 1218
+
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 138

~~~~~~~~~~~~

கனவில் காணாத ஜீவன்கள்
 என்னவனே -நீ
வரவில்லை வரவில்லை ..
புலம்பிகொண்டிருந்தேன்....
இப்போ இன்பமடா ....
கனவில் வருகிறாயே ....!!!


கனவில் காணாத ....
ஜீவன்கள் தான் - அவர்
நினைவால் புலம்புவர் ....
நொந்து மடிவர் ....!!!
நேரில் வருவது கனவும் ...
ஒன்றுதானே மனமே ....!!!


குறள் 1219
+
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 139

~~~~~~~~~~~~~~

கனவு  காண்பதில்லையோ...?

நேரில் வரவில்லை ...
மனம் நோகும் ....
நொந்துகொண்டிருக்கும் ...
காதலர்களே ....
நீங்கள் கனவு
காண்பதில்லையோ...?

கனவில் வருவதும் ...
நினைவில் வருவது ...
ஒன்றுதான் -நீங்கள்
கனவு காணாததால் .....
புலம்புகிறீர்கள் ....?

குறள் 1220
+
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்


கவிதை எண் - 140

<3 @}- <3


கருத்துகள்