திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 28 )

உயிர்வாங்கும் பொழுது ...!!!

மாலை பொழுதே ....
நான் காதலருடன் இருந்த ...
இன்ப பொழுதில் -நீ 
மாலை பொழுதாய் ...
இருந்தாய் .....!!!

என்னவனை ....
பிரிந்திருக்கும் பொழுது ...
இது மாலை பொழுதல்ல ...
என்னை கொல்லும்....
உயிர்வாங்கும் பொழுது ...!!!

குறள் 1221
+
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் 
வேலைநீ வாழி பொழுது.

+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 141
----

உன் காதலன் பிரிவுதானோ ...?

மயங்கும் 
மாலை பொழுதே .....
உன் மயக்கத்துக்கும் ...
உன் காதலன் பிரிவுதானோ ...?

புரிந்து கொள் பொழுதே ....
துணை இல்லாவிட்டால் ...
எல்லோர் காதலும் ...
துன்பம் தரும் பொழுதே ...!!!
மயக்கமும் மங்களும் ...
நிறைந்த துன்பமே ....!!!

குறள் 1222
+
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் 
வன்கண்ண தோநின் துணை.

+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 142

-----
துன்ப பொழுது ...!!!

என்னவன் அருகில் ....
இருக்கும் போது மெல்ல 
மெல்ல பயந்து பயந்து ...
என் மேனியில் படர்ந்த ...
மாலை பொழுதே ....!!!

இப்போ அவர் இல்லாத ...
தருணத்தில் -நீ 
நீ மாலை பொழுதல்ல ...
உயிரை பறிக்க வரும் ...
துன்ப பொழுது ...!!!

குறள் 1223
+
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் 
துன்பம் வளர வரும்.

+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 143

----

அவர் இல்லாத போது ..
என்னவனோடு ...
நான் இருக்கும் பொழுது ...
இன்ப மாலை பொழுது ...
என் உயிரை வளர்க்கும் ...
உயிர் பொழுது ....!!!

எப்படி ...?
அவர் இல்லாத போது ..
நீ கொலை பொழுதாய் ...
மாறி என் உயிரை ...
எடுக்கிறாய் ....?
நீ மயங்கி மயங்கி வரும் ...
வேலை என்னை கொல்லும்
பகைவன் போல் -நீ 

குறள் 1224
+
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து 
ஏதிலர் போல வரும்.

+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 144

---
இப்படி துன்பம் தருகிறதே ...!!!

இருள் சூழ்ந்து சூழ்ந்து ....
வரவர என் துன்பம் ....
தொடர் கதைபோல் ...
தொடர்கிறது பொழுதே ...!!!

காலை பொழுதுக்கு ...
என்ன நன்மை செய்தேன் ....
இனிமையாக இருக்க ....
மாலை பொழுதுக்கு ...
என்ன துன்பம் செய்தேன் ...
இப்படி துன்பம் தருகிறதே ...!!!

குறள் 1225
+
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் 
மாலைக்குச் செய்த பகை.

+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 145

கருத்துகள்