திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம்‍‍‍‍‍‍ 31)

உனை நினைத்து கலங்கிய... 

என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய... 
கண்கள் அழகிழந்து 
விட்டதடா ...!!!  

உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ 
அழகிழந்து இருக்கும்  கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!

குறள் 1231
+
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 151

#######

என்னவனை காணாமல் ....

என்னவனை காணாமல் ....
என் கண்களில் கண்ணீர் ...
பசந்து பசந்து வழிகின்றன ...!!!

விரும்பியவரை காணாத ...
கண்களால் வேறு என்ன ...
செய்ய முடியும் ....?
பார்பதற்கு மட்டும் இல்லை 
கண்கள் - காதலர் 
அழுவதற்கும் தான் ...!!!


குறள் 1232
+
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 152

###########

என் தோள்கள் நலிவதை ..

என்னவனே
உமை மணந்த தருணத்தில் ....
இன்பத்தால் பூரித்தது 
என் தோள்கள் ....!!!

உம்மை பிரிந்த ...
காலம் முதல் மெலிந்து ...
வருகிறது என் தோள்....
தவிக்கிறேன் துடிக்கிறேன் ..
என் தோள்கள் நலிவதை ..
பாராயோ ...?

குறள் 1233
+
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 153

###############

நான் படும் துயரத்தை ....!!!

என்னவனே
அழுதழுது தோள்கள் ...
மெலிந்து விட்டன ...
முன்னைய அழகை ...
இழந்து விட்டன ....!!!

அழகாக நீர் 
அணிந்த வளையல் கூட 
கழண்டு விழுகின்றன ...
இதை விட என் சொல்வேன் ..
நான் படும் துயரத்தை ....!!!

குறள் 1234
+
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் 
தொல்கவின் வாடிய தோள்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 154

################

கை நழுவி விழுகின்றன் ....

என்னவனின் பிரிவால் ....
அழகிய வளையல்கள் ...
கை நழுவி விழுகின்றன் ....
பூரித்த தோள்கள் நலிந்து ...
வருகின்றன ....!!!

என்னவனே ...
தேய்ந்த தோள்கள் ...
உன் பிரிவால் நான் ...
வாடுவதை ஊர் அறிய ...
செய்கிறதடா ....!!!

குறள் 1235
+
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 155

கருத்துகள்