திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம்‍‍‍‍‍‍ 32)

இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

என்னவனே ....
உன் பிரிவால் என் தோள்கள்
என் வளையல்கள் நலிகின்றன
துயரத்தின் கொடுமையை ...
அனுபவிக்கிறேன் ....!!!

எனது துயரை பார்த்த ....
உறவினர் உம்மை இரக்கம்....
அற்றவர் என்று சொல்லும் ...
ஒவ்வொரு நொடியும் ....
இதயம் வெந்து துடிக்கிறேன்....!!!

குறள் 1236
+
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 156



@@@@@



நெஞ்சே ஒரு தூது செல் ...

நெஞ்சே ஒரு தூது செல் ...
இரக்கமற்று பிரிந்திருக்கும் ...
என்னவனிடம் என் நிலையை ...
உரைப்பாயோ ...?

இடை மெலிந்து ...
தோள் மெலிந்து - என் ...
வளையல் இடும் கைகள் ..
மெலிந்து துடிப்பதை -அவரிடம்
சொல் நெஞ்சே - எனக்கு
தூதுசென்ற பெருமை பெறு ...
என் நெஞ்சே ....!!!

குறள் 1237
+
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 157



@@@@@



ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

என்னவளே ....
இறுக்க பிடித்த என் கைகள் ....
உனக்கு வழியை தருமே ...
கணப்பொழுதில் இறுக்கத்தை ..
கை விட்டேன் ....!!!

என்னவளே ...
உன் நலிவடைந்த வளையல் ...
கைகள் உன் அழகிய நெற்றியை ...
ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

குறள் 1238
+
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 158



@@@@@



எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

என்னவளே ...
உன்னோடு இருந்த நொடி ...
என் கைகள் உன்னிலிருந்து ...
விலகும் சந்தர்ப்பத்தில் ...
மெல்லிய குளிர் காற்று ...
எம்மை பிரித்தது உயிரே ...!!!

அந்த சிறு பிரிவையே ...
தாங்காத என்னவள் -என்னையே ...
பிரிந்திருக்கும் என்னவளே
எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

குறள் 1239
+
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 159



@@@@@



இப்போ வலியால் துடித்ததே ...!!!

எமக்கிடையே ...
உள் நுழைந்த குளிர் காற்று ...
எம்மை பிரித்தபோது ....
உன் நெற்றி நிறம் மாறியது ....!!!

அவள் நெற்றியின் நிறம் ...
மாறியது கண்டு அவள் ...
கண்கள் வெட்கப்பட்டான ...
அந்த கண்கள் இப்போ
வலியால் துடித்ததே ...!!!

குறள் 1240
+
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 160

கருத்துகள்