திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 36
காதல் கொடிய நோய் தானே ....!!!
வெறுத்து
நீர் பிரிந்து சென்றாலும் ...
எனக்கு வேதனை தர ....
நீர் பிரிந்து சென்றாலும் ....
என் மனம் உம்மையே ...
நாடுகிறதே.....!!!
என்னதான் நீர்
துன்பம் தந்தாலும் ...
உம்மையே சுற்றி சுற்றி ....
வரும் இந்த காதல் ....
கொடிய நோய் தானே ....!!!
குறள் 1256
+
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 176
வெறுத்து
நீர் பிரிந்து சென்றாலும் ...
எனக்கு வேதனை தர ....
நீர் பிரிந்து சென்றாலும் ....
என் மனம் உம்மையே ...
நாடுகிறதே.....!!!
என்னதான் நீர்
துன்பம் தந்தாலும் ...
உம்மையே சுற்றி சுற்றி ....
வரும் இந்த காதல் ....
கொடிய நோய் தானே ....!!!
குறள் 1256
+
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 176
@@@@@@@@@
என்னையே மறக்கவைகிறது ....!!!
என்னவனே ...
என் இதயம் நிறைந்தவனே ....
உன் மீது கொண்ட காதல் ...
என்னையே மறக்கவைகிறது ....!!!
நீர் நினைப்பதையும் ....
நீர் நினைக்காததையும் ....
செய்கிறேன் - நாணம்
ஒன்றையே இப்போ ...
என்னில் காணவில்லையே ....!!!
+
குறள் 1257
+
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 177
என்னவனே ...
என் இதயம் நிறைந்தவனே ....
உன் மீது கொண்ட காதல் ...
என்னையே மறக்கவைகிறது ....!!!
நீர் நினைப்பதையும் ....
நீர் நினைக்காததையும் ....
செய்கிறேன் - நாணம்
ஒன்றையே இப்போ ...
என்னில் காணவில்லையே ....!!!
+
குறள் 1257
+
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 177
@@@@@@@@@
மன அடக்ககோட்டையை உடைத்தவனே
என்
மன அடக்ககோட்டையை ....
உடைத்தவனே ....
மன அடக்ககோட்டையை இப்போ ...
பஞ்சு கோட்டையனதே....!!!
ஏய் கள்வனே ....
என்னை மயக்கும் பொய் ...
உரைத்தவனே ....
பொய்யிலும் ஒரு இனிமை ...
இருக்குதானடா .....!!!
+
குறள் 1258
+
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 178
என்
மன அடக்ககோட்டையை ....
உடைத்தவனே ....
மன அடக்ககோட்டையை இப்போ ...
பஞ்சு கோட்டையனதே....!!!
ஏய் கள்வனே ....
என்னை மயக்கும் பொய் ...
உரைத்தவனே ....
பொய்யிலும் ஒரு இனிமை ...
இருக்குதானடா .....!!!
+
குறள் 1258
+
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 178
@@@@@@@@@
நாணத்தால் விலகினேன் ...
என்னவனே ...
உன்னருகில் வந்தேன் ...
நாணத்தால் விலகினேன் ...
முடியவில்லை என்னவனே ...
ஊடலை மறைக்க .....!!!
நான்
விலகினாலும் -என்
மனம் அவரோடு ஊடல் ...
கொண்டு விட்டதே ...
இனி எப்படி என்னால் ...
தடுக்க முடியும் ...?
+
குறள் 1259
+
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 179
என்னவனே ...
உன்னருகில் வந்தேன் ...
நாணத்தால் விலகினேன் ...
முடியவில்லை என்னவனே ...
ஊடலை மறைக்க .....!!!
நான்
விலகினாலும் -என்
மனம் அவரோடு ஊடல் ...
கொண்டு விட்டதே ...
இனி எப்படி என்னால் ...
தடுக்க முடியும் ...?
+
குறள் 1259
+
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 179
@@@@@@@@@
எதுவுமே நடக்காததுபோல் ....
நெருப்பில் விழுந்த ....
நெய் போல் உருகுதே ...
என் மனம் உயிரே ....!!!
நீ கூடவும் ..
நான் ஊடவும்....
நடக்கும் திருவிழாவில் ...
எல்லாம் முடிந்தபின் ...
எதுவுமே நடக்காததுபோல் ....
மனம் நினைக்குமோ ....?
+
குறள் 1260
+
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 180
நெருப்பில் விழுந்த ....
நெய் போல் உருகுதே ...
என் மனம் உயிரே ....!!!
நீ கூடவும் ..
நான் ஊடவும்....
நடக்கும் திருவிழாவில் ...
எல்லாம் முடிந்தபின் ...
எதுவுமே நடக்காததுபோல் ....
மனம் நினைக்குமோ ....?
+
குறள் 1260
+
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 180
கருத்துகள்
கருத்துரையிடுக