திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 38)

துன்பங்களை துடைப்பான் ...!!!

என்னவன் என்னிடம் ...
என்றோ ஒருநாள் வருவான் ....
துன்பங்களை துடைப்பான் ...!!!

என்னிடம் இருக்கும் ...
அனைத்து துன்பங்களையும் ...
என்னவன் மீது கொட்டி ....
தீர்த்து அனுபவிப்பேன் ....
அத்தனை இன்பத்தை ....
பெறுவேன் ....!!!
+
குறள் 1266
+
அவர்வயின்விதும்பல்
+
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 186

@@@@@

துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!

என் கண்ணாலனே ....
நீ வந்தால் என்செய்வேன் ..?
ஊடல் செய்வோனோ...?
கூடல் செய்வேனோ ...?
இரண்டும் செய்வேனோ ...?

அத்துணை துன்பத்தை ...
அனுபவிக்கும் நான் ....
உன் வரவுக்காய் ....
துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!
+
குறள் 1267
+
அவர்வயின்விதும்பல்
+
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 187

@@@@@

மனசே பொறுத்திரு ....!!!

பொறுத்திருப்போம் ...
போரில் வெல்வோம் ...
நாட்டை காப்போம் ....
பொறுத்திருப்போம் .....!!!

நானும் 
என் துணைவியும் ....
மாலைபொழுதில் ...
விருந்துண்போம் 
மனசே பொறுத்திரு ....!!!
+
குறள் 1268
+
அவர்வயின்விதும்பல்
+
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 188

@@@@@

துடிப்பாய் உயிரே ....!!!

என்னவளே ...
நீ படும் துயரம் அறிவேன் ....
உன்னைவிட்டு பிரிந்திருக்கும் ..
எனக்கு புரிகிறது ....!!!

என்னை விட்டு ...
பிரிந்திருக்கும் பெண்ணே ....
ஒவ்வொரு நொடியும் ..
உனக்கு ஒவ்வொரு மணித்துளி ...
நாட்கள் ஒவ்வொன்றும் ....
வருடமாய் துடிப்பாய் உயிரே ....!!!
+
குறள் 1269
+
அவர்வயின்விதும்பல்
+
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 189

@@@@@

அவளுக்கு நான் எதற்கு ..?

என்னவள் ...
என்னை நினைத்து ...
வருந்தி வருந்தி 
ஏதேனும் அவளுக்கு ...
நடந்துவிட்டால் ....?

அவளுக்கு நான் எதற்கு ..?
என் அன்பு எதற்கு ...?
உடலோடு கலப்பு எதற்கு ...?
அத்தனையும் பூச்சியமாகி ....
விடுமே என் மனமே ....!!!
+
குறள் 1270
+
அவர்வயின்விதும்பல்
+
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 
உள்ளம் உடைந்துக்கக் கால்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 190

கருத்துகள்