திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 40)

அச்சத்தை உணர்த்துகிறது ....!!!

என் தோழியே ....
என்னவனை பிரிந்து ...
வாடிய துன்பம் கொடுமை...
அத்தனையும் மறைந்தது ....
என்னவன் என்னை கட்டி ...
தழுவிய நொடி ....!!!

என் மனது ஏதோ....
தவிக்கிறது மீண்டும் ...
என்னவன் பிரிந்தால் ...
என் நிலை எதுவாகுமோ ....
அச்சத்தை உணர்த்துகிறது ....!!!
+
குறள் 1276
+
குறிப்பறிவுறுத்தல் 
+
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 196

@@@@

என்னவன் பிரியபோகிறார் ....!!!

என்னவன் ...
என்னோடு இன்பமாய் ....
இருந்தாலும் -உடல் 
இணைந்ததே தவிர ....
உள்ளத்தால் பிரிந்தே ...
இருந்தான் தோழி ....!!!

என் கையில் இருந்த ....
வளையல்கள் கழன்று ...
விழுந்தபோதே அறிந்தேன் ...
என்னவன் பிரியபோகிறார் ....
என்னை காட்டிலும் என் 
வளையல்கள் புத்திசாலிகள் ....!!!
+
குறள் 1277
+
குறிப்பறிவுறுத்தல் 
+
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 197

@@@@@

நேற்றுதானே பிரிந்தாய் ....!!!

என்னவனே ...
நேற்றுதானே என்னை ....
பிரிந்து சென்றாய் .....!!!

என் உடல் ஏதோ....
ஒருவாரத்துக்கு முன் ...
பிரிந்து சென்றதுபோல் ...
தோல்கள் சுருங்கி ...
தேமல் படர்கிறதே ....!!!
+
குறள் 1278
+
குறிப்பறிவுறுத்தல் 
+
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 198

@@@@@

நினைக்கதோன்றுது மனமே ....!!!

என்னவனே -நீ ...
என்னை பிரிந்தால் ...
வளையல்கள் கழரும் ....
தோள்கள் மெலியும்....
இவையெல்லாம் எனை ...
விட்டு பிரியும் ....!!!

இவையெல்லாம் ...
நடக்காமல் இருக்கணும் ...
இல்லையேல் நானும் ...
பிரிந்து விடுவேன் என ...
நினைக்கதோன்றுது மனமே ....!!!
+
குறள் 1279
+
குறிப்பறிவுறுத்தல் 
+
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 199

@@@@@

காதல் அறிந்தோர் புரிவர் ....!!!

பெண்கள் ...
காதலை கண்ணால்பேசி ....
கண்ணால் வரவழைத்து ...
காதல் நோயால் வாடுவர் ...!!!

கண்ணால் 
காதல் செய்வது பெண்மையின் 
இன்னுமொரு பெண்மையாம் ...
காதல் அறிந்தோர் புரிவர் ....!!!
+
குறள் 1280
+
குறிப்பறிவுறுத்தல் 
+
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 200

கருத்துகள்