திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 45 )

ரசிப்போம் வா மனமே .....!!!

ஏய் மனமே ....
நானும் நீயும் என்னவனுடன் ....
கூடுவோம் வா மனமே வா ....
என்னவன் படும் வேதனையை ....
ரசிப்போம் வா மனமே .....!!!

அவசரபடாதே மனமே .....
அவரின் வேதனையை ....
ரசிக்கும் வரை கூடல் செய்யாதே 
ஊடல் செய்வோம் மனமே ....!!!


+
குறள் 1301
+
புலவி.
+
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 221

@@@

உணவுக்கு உப்பு அளவோடு ...

உப்பில்ல பண்டம் குப்பையில் ......
உப்பு அதிகமானாலும் குப்பையில் ...
உணவுக்கு உப்பு அளவோடு ....
இருப்பதுபோல் தான் ஊடலும் ....!!!

கூடலுக்கு முன் ஊடல் தேவை ....
ஊடலின்றிய கூடல் இன்பமில்லை ...
அளவுக்கு அதிகமான கூடல் ....
ஊடலில் சலிப்பை தரும் ....!!!

+
குறள் 1302
+
புலவி.
+
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 222

@@@@@

துன்பப்படுத்துவதற்கு சமன்

என்னவள் ஊடல் செய்கிறாள் ......
ஊடல் அதிகமாகின் கூடல் ....
செய்யணும் என் மனமே ....!!!

ஊடல் செய்த என்னவளை ...
கூடல் செய்யாமல் விடுவது ....
துன்பத்தில் இருக்கும் ஒருவரை ....
மேலும் துன்பப்படுத்துவதற்கு சமன்

+
குறள் 1303
+
புலவி.
+
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 223

@@@@@

நீரின்றி வாடும் பயிரை ...

என்னவளோடு ....
ஊடல் செய்தவளோடு ....
கூடல் செய்யாமல் விடின் ....!!!

நீரின்றி வாடும் பயிரை ...
அதன் ஆணிவேரோடு ...
அறுதெறிவதுபோல் ....
ஆகிவிடும் மனமே .....!!!

+
குறள் 1304
+
புலவி.
+
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 224

@@@@@

மலர்போன்ற கண்ணுடைய ....

ஒருவனின் அழகு உடலில் ....
அல்ல அவனது நற் குணங்களில் ...
தானே உள்ளது ......!!!

அந்த நற்குணத்தை ஆடவன் ....
மலர்போன்ற கண்ணுடைய ....
மனைவியின் ஊடலின் தாகத்தை ....
அறிந்த ஆடவனே உயர் மனிதன் ....!!!

+
குறள் 1305
+
புலவி.
+
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 225

கருத்துகள்