திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 46 )

இல்லாத காதல் வாழ்க்கை ....

பெரும் பிணி கொண்ட ஊடலும் ...
புதுமை கொண்ட புலவியும் ....
இல்லாத காதல் வாழ்க்கை ....
இன்பம் தரா காதலே ....!!!

ஏக்கமும் புதுமையும் ....
இல்லாத காதழ் வாழ்கை ....
முற்றி பழுத்த பழம் ....
பயனற்று அழுகி விழுவதும் ...
இளம் பிச்சு காய் பழுத்தது ...
போல் தெரிந்தாலும் வெம்பி ...
பழுத்தது போல் ஆகிவிடும் ....!!!

+
குறள் 1306
+
புலவி.
+
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 226

@@@@

இன்பத்திலும் அது துன்பம் ....!!!

கூடலும் புணர்ச்சியும் ....
கூடிச்சென்றால் இன்பம் ....
இடையில் நின்றுவிட்டால் ....
ஏக்கமே மிஞ்சும் ....!!!

ஏக்கத்தோடு ....
கூடிகொண்டிருத்தல் ....
இன்பமாக இருந்தாலும் ....
இன்பத்திலும் அது துன்பம் ....!!!

+
குறள் 1307
+
புலவி.
+
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 227

@@@@@

அந்த காதலில் என்ன பயன் ....?

காதல் என்றால் துன்பம் ....
இருக்கத்தான் செய்யும் ....
என்னால் அவளும் ...
அவளால் நானும் ....
துன்பப்படுவதே காதல் ....!!!

துன்பத்தை உணராமல் ....
காதல் செய்தால் அந்த ,,,,
காதல் இன்பத்தை தராத ....
வெற்று காதல் உயிரே ....
அந்த காதலில் என்ன பயன் ....?

+
குறள் 1308
+
புலவி.
+
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 228

@@@@@

குளிர்ந்த நீர்போல் இருக்கிறது .

நிழலின் கீழ் இருக்கும் -நீர் 
குளிர்ந்த தண்ணீராகும் ....
பருக பருக இன்பம் தான் ....!!!

என்னவனே ....
அன்புகொண்ட உன் கூடல் ....
குளிர்ந்த நீர்போல் இருக்கிறது ....
பருக பருக இன்பம் தான் ...!!!

+
குறள் 1309
+
புலவி.
+
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 229

@@@@@

நச்சரிக்கிறதே மனசு ....!!!

இன்பத்தை தணிக்காத ....
காதலுடன் இணைந்திருப்பது ....
தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்ப்பதுபோன்ற செயல் ....!!!

தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்த்தாலும் கூடு கூடு ....
என்று நச்சரிக்கிறதே மனசு ....!!!

+
குறள் 1310
+
புலவி.
+
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 230

கருத்துகள்