திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 47)

நான் நாடமாட்டேன் .....!!!

என்னவனின் ....
அழகு மார்பை ....
நான் வெறுக்கிறேன் .....
வீதியில் வந்தவர்கள் ....
ரசித்த அந்த மார்பை 
வெறுக்கிறேன் .....!!!

எச்சில் 
பட்ட என்னவனின் .....
மார்பை இனிமேல் நான் ...
நாடமாட்டேன் .....!!!


+
குறள் 1311
+
புலவி.
+
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 231

@@@

யார் நினைக்கிறார்களோ...?

என்னவனோடு .....
ஊடல் செய்தேன் .....
தும்மினான் ....
நான் நூறு என்று ....
வாழ்த்துவேன் ....
என்று நினைத்தார் ....!!!

நன்றாக நான் ....
வாழ்த்துவேன் ...
யார் நினைகிறார்களோ...?
என்றாலும் மனம் ...
தன்னை அறியாமல் ...
வாழ்த்தியது ....!!!

+
குறள் 1312
+
புலவி நுணுக்கம் 
+
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 232

@@@


மனதில் ஒரு சஞ்சலம் ....

பூத்து குலுங்கிய ....
மலர்களை பறித்து ....
பூமாலை சூடினேன் ....
என்னவனுக்கு .....!!!

மனதில் ஒரு சஞ்சலம் ....
என்னவன் மாலையுடன் ....
செல்கையில் எவளோ ....
ஒருத்தி கண்ணில் படுவாரே ....
கோபம் கொள்கிறேன் மனமே
+
குறள் 1313
+
புலவி நுணுக்கம் 
+
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 233

@@@


அத்தனை அன்பு உயிரே ....

யாரைகாட்டிலும் ....
என்னவளே உன்னில்தான் ....
அத்தனை அன்பு உயிரே ....
ஊடலின் போது பேசிவிட்டான் ....!!!

சினங்கொண்டாள்.....
யாரை காட்டிலும் என்றால் ...?
அந்த யார் யாரென்று ....
கேட்டு கேட்டே ஊடல் கொண்டாள்...!!!

+
குறள் 1314
+
புலவி நுணுக்கம் 
+
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 234


@@@


கண்ணீருடன் நின்றாள் ....!!!

இந்த ஜென்மத்தில் ....
உன்னை பிரியேன் உயிரே ....
என்றான் அவன் .....!
அப்போது அடுத்த ஜென்மம் ...
ஒன்று உண்டோ என்றாள்....?

அப்போ இந்த ஜென்மத்தில் 
பிரிவதற்கு வாய்ப்பு உண்டோ ...?
கேட்டபடியே கண் நிரம்பி ...
வழியும் கண்ணீருடன் நின்றாள் ....!!!

+
குறள் 1315
+
புலவி நுணுக்கம் 
+
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 235

கருத்துகள்