திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 48)

உன் நினைவில்லாமல் ....

உயிரே ....
எப்போதும் உன்னையே ....
நினைத்திருப்பேன் .....
உன் நினைவில்லாமல் ....
நான் வாழ்வதே இல்லை ....!!!

எப்போதும் என்னையே ....
நினைப்பேன் என்றால் ....
அவ்வப்போது மறக்கிறீர்கள் ....
மறந்தால் தானே நினைவுவரும் ....
செல்ல சண்டை இட்டுபடி ....
ஊடல் செய்தால் என்னவள் ....!!!

+
குறள் 1316
+
புலவி நுணுக்கம் 
+
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 236

@@@@@

உம்மை யார் நினைகிறார்கள் ....?

தும்மினேன் .....
யாரும்மை நினைகிறார்கள் ....
இப்போதானே உம்மை ....
வாழ்த்தினேன் - அதற்குள் ....
உம்மை யார் நினைகிறார்கள் ....?

அப்போ எனை விட்டு ....
உம்மை நினைக்கும் உள்ளமும் ....
உமக்கு உண்டோ ....?
கேட்டபடி அழுதால் -மனம் ...
மாறி அழுதமுகத்துடன் ....
ஊடல் செய்தாள் ....!!!
+
குறள் 1317
+
புலவி நுணுக்கம் 
+
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 237

@@@@@

ஓகோ ..உம்மை நினைப்பதற்கு ....

என்னவனுக்கு .....
தும்மல் வந்தது -நான் ...
சந்தேகம் கொள்வேன் ..
என்பதற்காக தும்மலை ....
அடக்கினான் .....!!!

ஓ .....ஓகோ ...
உம்மை நினைப்பதற்கு ....
நிறையப்பேர் உள்ளனரோ ....
எனக்கு மறைக்கிறீரோ....
என்று அழுதபடியே ஊடல் ...
செய்தாள்....!!!

+
குறள் 1318
+
புலவி நுணுக்கம் 
+
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 238

@@@@@

ஓ ..நீர் இப்படித்தானோ ...?

நான் பணிந்து ....
என்னவளை சமாதான ...
படுத்தினேன் .....!!!

ஓ ....
நீர் இப்படித்தான் ....
மற்ற பெண்களையும் ...
இப்படிதான் சமாதானம் ....
செய்வீரோ ..-கேட்டபடியே ....
ஊடல் செய்தாள்....!!!

+
குறள் 1319
+
புலவி நுணுக்கம் 
+
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 239

@@@@@

என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...

பேசினால் தானே ...
பிரச்சனை பேசாமல் ....
இருந்து அவளின் அங்கத்தை ....
பார்த்துகொண்டிருந்தான் ....!!!

ஓ ...யாருடைய மேனிபோல் ....
என் மேனி இருக்கிறது என்று ....
பார்க்கிறீரோ ....? சீ சீ சீ 
என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...
சினங்கொண்டாள் அவள் ....!!!

+
குறள் 1320
+
புலவி நுணுக்கம் 
+
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 240

கருத்துகள்