திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 49)

எந்தத்தவறும் இல்லை ...

என்னவனிடம் .....
எந்தத்தவறும் இல்லை ...
நன்கு அறிவேன் ....
செல்ல சண்டையே ....
போடுகிறேன் ....!!!

செல்ல சண்டை தானே ...
கூடலையும் ஊடலையும் .....
கடல் போல் பெருக்கும்....!!!

+
குறள் 1321
+
ஊடலுவகை
+
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 241

@@

கொடும் குற்றமில்லை ....!!!

என்னவனோடு .....
நான் செய்யும் சிறு சண்டை ....
ஊடலின் போது ஏற்பட்டாலும் ....
அதுவென்றும் கொடும் ....
குற்றமில்லை ....!!!

காதல் என்றால் ,,,,,
கூடலும் சண்டையும் ....
கொஞ்சலும் இருக்கத்தானே ....
செய்யும் ....!!!

+
குறள் 1322
+
ஊடலுவகை
+
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 242

@@

தேவலோகத்தில் கூட கிடைக்குமோ ....?

நிலத்தோடு நீர்கலந்தால் ....
நீரெது நிலமெது....?
இரண்டற கலந்துவிடும் ....!!!

என்னவனோடு .....
ஊடல் செய்யும்போது ....
கிடைக்கும் இன்பம் ....
தேவலோகத்தில் கூட ....
கிடைக்குமோ ....?

+
குறள் 1323
+
ஊடலுவகை
+
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 243

@@

ரகசிய மந்திரம் ....!!!

ஊடல் ஊடல் ...?
ஊடலென்றால் ...?
என்னவனும் நானும் ....
இறுககட்டி பிடிக்க உதவும் .... 
ரகசிய மந்திரம் ....!!!

ஊடலையும் ....
கலைத்துவிடும் .....
மனநிலையும் மனதில் ....
மறைந்துதான் இருக்கிறது ....!!!

+
குறள் 1324
+
ஊடலுவகை
+
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 244

@@

கோபத்திலும் அழகு இருக்கு 

என்னவனில் ....
தவறில்லை எனக்கு ...
நன்றாக புரிகிறது .....
என்றாலும் ஊடலில் ....
சின்ன சண்டையும் அழகு ....!!!

என் 
மீது உள்ள கோபத்தில் ....
என் மெல்லிய தோளை....
தொடாமல் இருக்கும் ...
என்னவனில் கோபத்திலும் ....
ஒரு அழகு இருக்கத்தான் ..
செய்கிறது 

+
குறள் 1325
+
ஊடலுவகை
+
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 245

கருத்துகள்