திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ( பாகம் 50)

உண்ட உணவு செரிக்கவேண்டும் .....!!!

விருப்பமான உணவை ....
உண்பதை விட -உண்ட உணவு 
செரிக்கவேண்டும் .....!!!

இன்பத்தில் இன்பம் ....
கூடல் செய்வதல்ல .....
கூடலுக்கு முன் ஊடல் ....
செய்வதே ....!!!

+
குறள் 1326
+
ஊடலுவகை
+
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.


+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 246

@@

யாருக்கு வெற்றி ? யாருக்கு தோல்வி ?

யாருக்கு வெற்றி ...?
யாருக்கு தோல்வி ...?
ஊடலில் தோற்றவரே ....
வென்றவர் ஆவார் ....!!!

எப்படி தெரியும் ....?
கூடி பெறும் இன்பத்தில் ...
இறுதியில் ஊடலின் ...
வென்றவர் இனம் ...
காணப்படுவர் .....!!!

+
குறள் 1327
+
ஊடலுவகை
+
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 247

@@

இன்பம் கிடைக்குமோ ....?

வியர்வை வரும்வரை ...
விரும்பியவருடன் ....
கூடிபெற்ற இன்பம் ....
இன்னுமொருமுறை ....
கிடைக்குமோ .....?

இன்னொருமுறை ....
ஊடல் செய்தால் ....
முன் பெற்ற கலவி ....
இன்பம் கிடைக்குமோ ....?

+
குறள் 1328
+
ஊடலுவகை
+
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 248

@@

எனக்கொரு உதவி செய்வாயோ .....?

நிலா ஒளி முகத்தால் ....
ஒளியில் மின்னுகிறாள்.....
ஆவலுடன் நான் பெறும் ....
ஊடல் இன்பம் இன்னும் ...
தொடரனும் .....!!!

ஏய் இரவே ....
எனக்கொரு உதவி ....
செய்வாயோ .....?
இன்று நீ விடியாமல் ....
நீண்டுருப்பாயோ....?

+
குறள் 1329
+
ஊடலுவகை
+
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 249

@@

சின்னனாய் விலகியிருப்பது ஊடல்

சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!

ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!

+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250
 

கருத்துகள்