திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம்‍‍‍‍‍‍+30)

பூவாய் வாடுகிறேன்

என்னவனே ....!!!
நீர் இல்லாத மாலையின்
வலி புரிகிறது ....!!!
மாலை பொழுது வரும் ...
வேலையில் நெருப்பில் ..
விழுந்த பூவாய் வாடுகிறேன் ....
நீர் என்னருகில் ....
இருந்த  மாலை ....
பொழுதின் இன்பம் ...
இத்தனை துன்பத்தை ...
தருமென்று அறிந்திலேன் ...!!!
குறள் 1226
+
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 146

@2@2@2@2

வாடி வந்தங்குகிறது .....!!!

என்னவனே நான் ...
உணர்ந்தேன் -காதல்
காலையில் அரும்பும் ....
மொட்டு .....!!!
பகல் முழுதும் காதல்....
இன்பத்தால் பூரிக்கிறது ..
பூத்து குலுங்குகிறது ....
மாலையில் வாடி
வந்தங்குகிறது .....!!!
குறள் 1227
+
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 147

@2@2@2@2

தணலில் வேகுதடா ...

காதலனே .....
மாலை பொழுது வேளை...
தணலில் வேகுதடா ...
என் மனமும் உடலும் ...!!!
ஆயனே ...
உன் புல்லாங்குழல் ஓசை ..
மாலை பொழுதில் என்னை ...
கொல்லவரும் கருவியின் ...
ஓசைபோல் இருக்குதடா ...!!!
குறள் 1228
+
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 148

@2@2@2@2

என் ஊரையே வதைகிறாய் ...

மாலை பொழுதே .....
நீ பொல்லாத கொடுமை ...
செய்கிறாயே ....
உன் வரவு என்னை ....
கொடுமை படுத்துகிறதே ....!!!
என் அறிவையே ...
மயக்கும் மாலை பொழுதே ....
என்னை மட்டும் ....
துன்பபடுத்தவில்லை ....
என் ஊரையே வதைகிறாய் ...
பாவம் காதலர்கள் ....!!!
குறள் 1229
+
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 149

@2@2@2@2

உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

என்னவனே ....
உழைப்புக்காக பிரிந்தவனே ...
ஊர் விட்டு சென்றவனே ....
நம்காதலை நினைத்து வாழ்ந்து ..
கொண்டிருக்கிறேன் ....!!!
உன் நினைவால் மாய்ந்து ...
போகாத என் உயிர் -மாலை
பொழுது வரும் வேளைகளில் ...
உயிரே மாய்ந்து போகிறதே ....!!!
குறள் 1230
+
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 150

கருத்துகள்