திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 01-05)

உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!

சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும் 
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!

அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 

-----

நட்பு வளர்பிறை மதி

அன்புடனும் அறிவுடனும் ...
உருவாகும் நட்பே உயிர் நட்பு ....
உயிர்நட்பு வளர்பிறை மதிபோல் ....
தினமும் வளரும் ....!!!

சுயநலத்துக்காகவும் ....
குறு நோக்கத்துக்காகவும் ...
இணையும் நட்புக்கள் ....
முழுநிலா தேய்வதுபோல்....
தேய்ந்து கொண்டே செல்லும் ....!!!
+
குறள் 782
+
நட்பு
+
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 02
----
உன்னுடன் பழகுவது ....!!!

அன்பு நண்பா ....
படிக்க படிக்க இன்பம் ....
தரும் புத்தங்கங்ககள் போல் ....
இருக்குதடா உன்னுடன் ...
பழகுவது ....!!!

நீ 
மீண்டும் எப்போது ....
வருவாய் மீண்டும் ...
எப்போது பேசுவாய் ...
ஏங்குதடா மனசு ......!!!
+
குறள் 783
+
நட்பு
+
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 03
----
இன்பத்துக்கு மட்டுமே நட்பல்ல ....!!!

கூடி 
கும்மாளம் அடிப்பது ...
நட்பல்ல - இன்பத்துக்கு ....
மட்டுமே நட்பல்ல ....!!!

நண்பன் வழிதவறும் ...
புத்தி தவறும் போது...
புத்தி கூறுவது தான் ...
உண்மை நட்பு .....!!!
+
குறள் 784
+
நட்பு
+
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 04
---------
நட்புக்கு அவசியம் அன்று ....!!!

அருகில் இருப்பத்தோ ...
முகம் பார்பதோ 
நெருங்கி பழகுவதோ ...
நட்புக்கு அவசியம் அன்று ....!!!

எண்ணத்தால் ....
உன்னை நான் நினைப்பதும் ...
என்னை நீ நினைப்பதும் ...
உண்மை நட்பின் அடையாளமே ...!!!
+
குறள் 785
+
நட்பு
+
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
நட்பாங் கிழமை தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 05

கருத்துகள்