திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 06-10)

பூவாய் பூப்பதே நட்பு .....!!!

கண்டவுடன் மனம் ....
குளிர பேசுவதும் ....
கைகுலுக்குவதும் ...
நட்பே இல்லை ....!!!

முகத்தில் நட்பை ...
காட்டாதே உள் அகத்தில் ...
நட்போடு பழகு ....
மனமும் முகமும் ...
பூவாய் பூப்பதே நட்பு .....!!!
+
குறள் 786
+
நட்பு
+
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 06

---------

உனக்கு உறுதுணையாக .....!!!

தீய 
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான் 
இருக்கிறேன் உனக்கு 
உறுதுணையாக .....!!!

உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என் 
உயிர் நண்பணடா ....!!!
+
குறள் 787
+
நட்பு
+
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 07

----------

என் உயிர் நண்பனே ....!!!

ஆடை அவிழும் போது .....
கூட்டத்தில் மானம் ...
காக்கும் கைபோல் ....!!!

நண்பா ....
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பார்திருப்பேனோ...?
உடன் வந்து காப்பேண்டா ...
என் உயிர் நண்பனே ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 08

----------

அன்புடன் உதவுவதே நட்பு 

நட்பென்றால் ...
மனவேறுபாடில்லாமல் ...
தானாக முன்வந்து ....
உதவுவதே ....!!!

உனக்கு நானும் ...
எனக்கு நீயும் ...
என்றும் மாறாத ....
அன்புடன் உதவுவதே ....
உயிர் நட்பு ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 09

-----------

அது நட்பல்ல ....!!!

உன்னை நானும் ....
என்னை நீயும் ...
புகழ்ந்து பேசின் ...
அது நட்பல்ல ....!!!

எம்மைப்போல் ...
நட்பு யாரும் இல்லை ....
நட்புக்கு நாமே சின்னம் ...
வசையான வார்த்தைகள் 
உண்மை நட்பல்ல ...
நட்பு ஒன்றும் அலங்கார ...
வார்த்தையில்லை....!!! 
+
குறள் 790
+
நட்பு
+
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று 
புனையினும் புல்லென்னும் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -10

கருத்துகள்