திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 11-15)

நட்பை விட எவையும் இல்லை ....!!!

நட்பு உயிருக்கு சமன் .....
நட்புக்காக நல்லவை ....
எதையும் செயலாம் ....
நட்பை விட உயர்வு ....
எவையும் இல்லை ....!!!

கண்டவுடன் நட்பும் ....
ஆராயத நட்பும் ......
கேடுதளிலும் கெடுதல் ....
உயிருள்ளவரை ....
கெடுதலே கொடுக்கும் ....!!!
+
குறள் 791
+
நட்பாராய்தல்
+
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் 
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -11

----------

நட்பு சொல்வதெல்லாம் செய்யாதே ....!!!

நட்பு சொல்வதெல்லாம் .....
ஆராயாமல் செய்யாதே ....
நட்புக்கு அடிமை படாதே ....
நல்ல நட்பே உயர் நட்பு ....!!!

கெட்ட நட்புக்கு ....
உறுதுணையாக இருப்பது ...
உயிர் போகுவரை ....
உயிர் குடிக்கும் துன்பம் ...
தரும் மனிதா ....!!!
+
குறள் 792
+
நட்பாராய்தல்
+
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை 
தான்சாம் துயரம் தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -12

-----------

குணமறியாத நட்பு நட்பல்ல ....!!!

அன்பான குணம் ....
அழகான குடும்ப பிறப்பு .....
ஒருவனின் குற்றங்கள் ....
குறையாத சுற்றம் ...
உடையோனே ....
சிறந்த நட்பு .....!!!

குணமறியாத நட்பு ....
புரியாத பிறப்பு ....
குற்றங்கள் நிறைந்த நட்பு ...
கெட்ட நட்பாகும் ....!!!
+
குறள் 793
+
நட்பாராய்தல்
+
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -13

------------

நற்குடி பிறப்பு நல் நட்பு ....!!!

நட்குடியில் பிறந்தவன் ....
நட்பே நட்பு ....
நற்குடி பிறப்பு ...?
தனக்கும் நட்புக்கும் ....
பழிச்சொல் வரக்கூடாது ...
என நினைக்கும் நட்பு ....!!!

நட்குடி நட்பை ...
எந்த விலைகொடுத்தும் ...
பெற்றிட வேண்டும் ....
உயிரிலும் மேலான ...
நட்பென்பதும் இதுவே ....!!!
+
குறள் 794
+
நட்பாராய்தல்
+
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -14

-----------

தட்டிக்கேட்பதும் நட்பின் கடமை ....!!!

தட்டி கொடுப்பது ....
மட்டுமல்ல நட்பின் ...
கடமை ....!
தட்டிக்கேட்பதும் ....
நட்பின் கடமை ....!!!

தவறு 
செய்யாமல் இருக்கவும்...
செய்தால் உரத்தகுரலில் ...
ஏசுவதும் - அவசியத்தில் ...
தண்டிக்கவும் உரிமை ...
உள்ளதே நட்பு ....!!!
+
குறள் 795
+
நட்பாராய்தல்
+
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய 
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -15

கருத்துகள்