திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 16-20)

துன்பத்தில் இணைபவனே நண்பன் 
இன்பத்தில் இணைபவன் ...
நண்பன் அல்லவே அல்ல ...
துன்பத்தில் இணைபவனே...
உற்ற நண்பன் .....!!!

இறைவா எனக்கு ....
துன்பத்தை கொடு ....
உற்றநண்பன் யாரோ ...
உள்ளபோது மட்டும் ...
யார் என்பதை கண்டறிய .....!!!
+
குறள் 796
+
நட்பாராய்தல்
+
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதோர் கோல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -16

---------

அறிவற்ற நண்பனை விலக்கு....!!!

இறைவன் எனக்கு ....
கொடுத்த வரம் ....
அறிவற்ற நண்பர்களை ....
என்னிடம் இருந்து ....
பிரித்தமையே .....!!!

அறிவற்ற நண்பனை ....
இழப்பது ஒருவனின் ...
வாழ்க்கை பாக்கியமே ....
இறைவன் கொடுத்த ...
பெரும் ஊதியம் ....!!!
+
குறள் 797
+
நட்பாராய்தல்
+
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் 
கேண்மை ஒரீஇ விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -17

----------

துன்பத்தில் உதவாத நட்பு வேண்டாம் ...!!!

ஊக்கம் என்பது ....
வாழ்க்கையின் ஊட்டசத்து ....
ஊக்கமற்ற செயல்கள் ...
வாழ்கையே கெடுத்துவிடும் ....!!!

துன்பத்தில் 
உதவாத நட்பு ....
இருந்தென்ன பயன் ....?
அந்த நட்பு விலகுவதால் ...
என்ன கவலை ....?
+
குறள் 798
+
நட்பாராய்தல்
+
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க 
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -18

-----------

துன்பத்தில் உதறிய நண்பனே ....!!!

துன்பத்தில் துடித்தபோது ....
கை உதறிவிட்ட நண்பனே ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீர்கூட சுடுகிறது ....!!!

உன்னை நினைக்கும் ...
நொடியெல்லாம் நெஞ்சம் ...
நெருப்பாய் கொதிக்கும் ....
உயிர் பிரியும் பொழுதில் ...
உன் நினைவு தணலாய் ...
சுடுமட நண்பா ....!!!

+
குறள் 799
+
நட்பாராய்தல்
+
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை 
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -19

-----------

விரும்பாத நட்பை விலக்கி வை ...!!!
மனதிலே மாசில்லை ...
செயலிலே குற்றமில்லை .....
அற்புதமான நட்பை ...
எதை கொடுத்தேனும் ..
பெற்றிட வேண்டும் ....!!!

அன்போடு ஒத்துவராத ....
உலகோடு சேர்ந்துவராத....
நட்பை எந்த விலை ....
கொடுத்தேனும் விலகிட ...
வேண்டும் ....!!!
+
குறள் 800
+
நட்பாராய்தல்
+
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் 
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -20

கருத்துகள்