திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 21-25)

பழமை பேணும் நட்பு ....!!!

என் அருமை தோழா ....நாம் காலத்தால் அழியாத ....நண்பர்கள் -காலம் காலமாய் ...வாழும் நண்பர்கள் .....!!!
நான் விட்ட தவறை நீயும் ....நீ விட்ட தவறை நானும் ....கண்டுகொள்ளாமல் ....நட்போடு தொடர்கிறோம்இதுதாண்டா உயிர் நட்பு ...பழமை பேணும் நட்பு ....!!!+குறள் 801+பழைமை+பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.+திருக்குறளும் கவிதையும் - நட்பியல் +கவிதை எண் -21

------------

நண்பா.....
நீ என்னை உரிமையுடன் ....
திட்டுவதும் அரவணைப்பதும் ...
நான் உன்னை உரிமையுடன் ...
திட்டுவதும் அரவணைப்பதும் ...
தாண்டா பழமை நட்பு ....!!!
நீ 
என்னை உரிமையோடு ....
திட்டியதும் அன்பு கொண்டதையும் 
எண்ணி எண்ணி மகிழ்வதே ...
நட்புக்கு சான்றடா நண்பா ....!!!
+
குறள் 802
+
பழைமை
+
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு 
உப்பாதல் சான்றோர் கடன்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -22
------------

என் 
அருமை நண்பா ....
நீ எனக்காக உரிமையோடு ...
செய்த காரியம் எனக்கு ...
பிடித்ததோ இல்லையோ ...
நான் ஏற்கிறேன் நண்பா ...!!!
எனக்காக ....
என் உரிமைக்காக நீ ...
செய்த காரியத்தை நான் ...
ஏற்காவிட்டால் நம் நட்பில் ...
என்ன பயன் உண்டு ....?
+
குறள் 803
+
பழைமை
+
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை 
செய்தாங்கு அமையாக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -23
-------------

மன்னித்துவிடு நண்பா ....
உன் மீது வைத்த உரிமை ...
நட்பால் உன்னை கேளாது ....
ஒரு செயல் செய்துவிட்டேன் ...
உனக்கு பிடிக்குமோ ....?
புரியவில்லை .....!!!
நீ எதை செய்தாலும் ...
என் நன்மைக்காகவே ...
செய்திருப்பாய் ....!
அதைகூட புரியாத அறிவற்ற ...
நண்பனில்லை நான் ....
உன் பழமை மாறாநண்பன்....!!!
+
குறள் 804
+
பழைமை
+
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் 
கேளாது நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -24
--------------

கவலை படாதே நண்பா ....
கவலை படாதே நண்பா ....
நீ செய்த செயலால் நான் ...
வருந்தவில்லை ....
எனக்கு தீமையாகிவிட்டதே...
என்று கவலைபப்படாதே ...!!!
நீ
அறியாமல் செய்யவில்லை ...
என் மீதுள்ள உரிமையால் ..
செய்த தவறை மன்னிக்கிறேன் ....
இல்லையேல் நம் நட்பில் ...
என்ன பயனுண்டு .....?
+
குறள் 805
+
பழைமை
+
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க 
நோதக்க நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -25

----------------

கருத்துகள்