திருக்குறளும் கவிதையும் - நட்பியல்( 26-30)

நட்பு பிரியாது தோழா ....!!!

நண்பனே ....
நாம் கொண்ட நட்பு .....
எல்லை தாண்டாத நட்பு ....
எல்லையற்ற நட்பு ....!!!

உன்னால் எனக்கு துன்பம் ...
எதற்காக கலங்குகிறாய் ....?
என் உயிர் பிரிந்தாலும் -நம் ....
நட்பு பிரியாது தோழா ....!!!

+
குறள் 806
+
பழைமை
+
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் 
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -26

-------------

கவலை எனக்கேதுமில்லை ....!!!

தெரியும் நண்பா....
நீ செய்வது எனக்கு ....
தீமையில் முடியும் ....
அறிந்திருந்தேன் ....
என்றாலும் கவலை ...
எனக்கேதுமில்லை ....!!!

சிறுவயதிலிருந்து ....
நாம் பேணும் நட்பு ....
தீமைகள் வந்தாலும் ...
பொருத்துகொள்ளும்...
நண்பனே ....!!!

+
குறள் 807
+
பழைமை
+
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் 
வழிவந்த கேண்மை யவர்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -27

------------

அச்சமடைகிறேன் நண்பா ...!!!

கூறினார்கள் நண்பா .....
நீ தப்பாக என் உரிமையை ....
பயன்படுத்தி தப்பு செய்கிறாய் ....
அயலவர் கூறினார்கள்....
என்றாலும் நம்பவில்லை ....!!!

உண்மையில் நண்பா ....
நீ தப்புசெய்திருந்தால் ....
இத்தனை நாள் நாம் கொண்ட ....
நட்பு வீணாகிவிடுமே ...
அச்சமடைகிறேன் நண்பா ...!!!

+
குறள் 808
+
பழைமை
+
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு 
நாளிழுக்கம் நட்டார் செயின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -28

--------------

நம் நட்பின் உறவை உலகம் அறியும் ....!!!

உன் 
உரிமையை நீயும் ....
என் 
உரிமையை நானும் ....
விட்டுகொடுக்காமல் ....
நீண்டகாலம் நட்பு ...
கொள்கிறோம் ......!!!

எமக்கிடையே ...
கெடுதல் வந்தாலும் ....
நாம் பிரியோம் ....
நம் நட்பின் உறவை ....
உலகம் அறியும் ....!!!

+
குறள் 809
+
பழைமை
+
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை 
விடாஅர் விழையும் உலகு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -29

-------------

பகைவன் கூட நட்பை விரும்புவான் ....!!!

நீண்ட கால நட்பு ....
தவறுகள் செய்தாலும் ....
அறிவுடைய நண்பர்கள் ....
பொறுத்துகொள்வர் ....!!!

அறிவுள்ள நட்பை ....
பிரியாதோரை.....
அவர்களின் பகைவன்கூட .....
மனதார விரும்புவர் ....!!!

+
குறள் 810
+
பழைமை
+
விழையார் விழையப் படுப பழையார்கண் 
பண்பின் தலைப்பிரியா தார்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -30

கருத்துகள்